ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்?

|

ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் குறித்த சில அம்சங்கள் லீக்காகியுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளன. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலை ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் உடன் ஒப்பிடும்படியான தொடர்ச்சியான ஸ்க்ரீன் ஷாட்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளது. ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக தாமதம்

கொரோனா தொற்று காரணமாக தாமதம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபோன் 12 தொடரின் வெளியீட்டு நிகழ்வு தாமதமாகிவிட்டது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய ஐபோன் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

டிப்ஸ்டர் ட்வீட்டில் வெளியான தகவல்

டிப்ஸ்டர் ட்வீட்டில் வெளியான தகவல்

டிப்ஸ்டர் ட்வீட்டில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் குறித்த சில அம்சங்கள் கசிவாகியுள்ளது. அடுத்த வெளியாக இருக்கும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

6.7 இன்ச் பெரிய டிஸ்ப்ளே

6.7 இன்ச் பெரிய டிஸ்ப்ளே

டிப்ஸ்டர் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5.8 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். ஐபோன் 11 புரோ மேக்ஸ் 6.7 இன்ச் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறுகின்றன. இது 1,284x2,788 பிக்சல்களின் உயர் தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது.

வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நீங்களும் இப்படி ஏமாறாதீர்கள்!

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

ஐபோன் 12 புரோ மேக்ஸின் காட்சி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களில் இதுகுறித்த தகவல் இல்லை. இருப்பினும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் தேவைப்படலாம் என அறிக்கை தெரிவிக்கிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் நான்காவது தலைமுறை நியூரல் என்ஜினுக்கு ஏ -14 பயோனிக் சிப் இருப்பதாகக் கூறப்படுகிறது. தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு, 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளது. கூடுதலாக, கேமரா அமைப்பில் தற்போதைய ஐபாட் புரோ மாடல்களைப் போலவே லிடார் சென்சார் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

மிக நீண்ட பேட்டரி ஆயுளை ஐபோன் மாடல் கொண்டிருக்கும் என சில தகவல்களில் உறுதியாக தெரிவிக்கப்படுகிறது. இது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸை விட இரண்டு மணி நேரம் நீடிக்கும். மற்றொரு ஸ்கிரீன் ஷாட் ஐபோன் 12 புரோ மேக்ஸ் அமெரிக்காவில் கிடைக்கும், ஆரம்ப விலை 1,099 (தோராயமாக இந்திய விலைபடி ரூ.80,600) ஆக இருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

ஐபோன் 12, ஐபோன் 12 மேக்ஸ், ஐபோன் 12 ப்ரோ, மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என எதிர்பார்க்கப்படும் நான்கு ஐபோன் 12 தொடர் மாடல்களின் சில விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. ஐபோன் 12 விலை டாலர் 699 (தோராயமாக ரூ. 51,200) மற்றும் 749 டாலர் (தோராயமாக ரூ. 54,800), ஐபோன் 12 மேக்ஸ் 799 டாலர் (தோராயமாக ரூ. 58,500) மற்றும் 849 டாலர் (தோராயமாக ரூ. 62,200), ஐபோன் 12 ப்ரோ 1,049 டாலர் (தோராயமாக ரூ. 76,800) ஐபோன் 12 புரோ மேக்ஸ் 1,149 டாலர் (தோராயமாக ரூ. 84,100) முதல் 1,199 டாலர் வரை (தோராயமாக ரூ. 87,800) இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

AMOLED டிஸ்ப்ளே வசதி

AMOLED டிஸ்ப்ளே வசதி

நான்கு மாடல்களும் AMOLED டிஸ்ப்ளே, A14 SoC ஆல் இயக்கப்படும் என தெரிகிறது. இதில் ஃபேஸ் ஐடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மேக்ஸ் 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளிட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புகளுடன் வரும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IPhone 12 Pro Max May Launch with These Specifications: Here the Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X