Home
Mobile

ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ விற்பனை தொடக்கம்: ஆரம்பமே சலுகையோடு- விலை விவரங்கள்!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன்களுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டுவிட்டது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ

ஐபோன் 12 ப்ரோ முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சீனா மற்றும் ஐப்பான் உள்ளிட்ட சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. அதேசமயத்தில் இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ விலை விவரங்கள்

ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ விலை விவரங்கள்

ஐபோன் 12 மற்றும் 12 ப்ரோ ஆரம்ப விலை குறித்து பார்க்கையில் ஐபோன் 12 ஆரம்ப விலை ரூ.79,900 ஆகவும் 12 ப்ரோ ரூ.1,19,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,900 எனவும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.84,900 எனவும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.94,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 மினி மற்றும் 12 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 12 மினி மற்றும் 12 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 12 ப்ரோ 128 ஜிபி வேரியண்ட்டில் விலை ரூ.1,19,900 எனவும் 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.1,29,900 எனவும் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,49,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 மினி மற்றும் 12 ப்ரோ மேக்ஸ் மாடலை ஐபோன் 12 தொடருடன் அறிவித்தது. இந்த இரண்டு மாடல்களும் அடுத்த மாதம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ இரண்டும் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது. ஆப்பிள் ஆன்லைன் தளங்களில் ஐபோன் டிரேட் இன் சலுகையுடன் கிடைக்கின்றன. அதேபோல் அமேசான் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ஐபோனை வழங்குகிறது. பிளிப்கார்ட்டில் தற்போதுவரை ஐபோன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் கேஷ்பேக்

அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் கேஷ்பேக்

ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் மூலம் ஐபோன் 12 வாங்கும்போது ரூ.6000 கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. அதோடு 16 மாதங்கள் வரை நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பமும் கிடைக்கிறது. ஐபோன் 12 ப்ரோ எச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.5000 கேஷ்பேக் வழங்குகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ எச்டிஎஃப்சி டெபிட் கார்ட் மூலம் வாங்கும் போது ரூ.1,500 கேஷ்பேக் பெறலாம்.

ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ அம்சங்கள்

ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ அம்சங்கள்

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களும் நானோ சிம் மற்றும் இ-சிம் என்ற இரட்டை சிம் ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த மாடல்கள் ஐஓஎஸ் 14-ல் இயங்குகின்றன. ஐபோன் 12, 12 ப்ரோ ஆகிய இரண்டுமே 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஐபோன்கள் 16-கோர் நியூரல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்க்ரீன் மேற்புறத்தில் செராமிக் ஷீல்ட் கிளாஸ் இருக்கிறது.

கேமரா அமைப்புகள்

கேமரா அமைப்புகள்

ஐபோன் 12 பின்புறத்தில் இரண்டு 12 மெகாபிக்சல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.ஐபோன் 12 ப்ரோ மூன்று 12 மெகாபிக்சல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் டெப்த் கவரேஜுக்கு லிடார் சென்சார் இருக்கிறது.

ஃபேஸ்டைம் எச்டி

ஃபேஸ்டைம் எச்டி

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ பாதுகாப்பு அம்சத்திற்கு ஃபேஸ் ஐடியை ஆதரிக்கிறது. அதேபோல் ஃபேஸ்டைம் எச்டி 1080 பிக்சல் வீடியோ அழைப்பை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

pic courtesy: Social Media

More from GizBot

Best Mobiles in India

English summary
Iphone 12, Iphone 12 Pro Sale Start in India: Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X