வெறும் ரூ.17,399 கொடுங்க.. இந்த iPhone-ஐ தூக்குங்க.. போட்டுத்தாக்கிய Flipkart.. நம்பி வாங்கலாமா? என்ன மாடல்?
"என்னது வெறும் ரூ.17,399 க்கு ஐபோன்-ஆ!" என்று வாய்பிளக்க வைக்கும்படியாக பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஒரு தரமான வேலையை பார்த்துள்ளது. ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 15 சீரீஸை (iPhone 15 Series) அறிமுகம் செய்ததும் பழைய ஐபோன்களின் விலைகள் கடுமையாக சரிந்துள்ளன.
அறியாதோர்களுக்கு ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களின் அனைத்து ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.10,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபோன் 14 ரூ.69,900 க்கும், ஐபோன் 14 பிளஸ் ரூ.79,900 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 13 மீதும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அதன் அசல் விலையான ரூ.79,900க்கு பதிலாக ரூ.59,900க்கு வாங்க கிடைக்கிறது. இதற்கிடையில் தான் பிளிப்கார்ட் வலைத்தளமானது ரூ.17,399க்கு ஒரு ஐபோன் மாடலை விற்பனை செய்கிறது. அதென்ன மாடல்? அதை நம்பி வாங்கலாமா, வேண்டாமா? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது.. ஒரு காலத்தில் உலகம் முழுவதும் அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடலாக இருந்த ஆப்பிள் ஐபோன் 12 மாடலை பற்றித்தான். பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போதும் கூட இந்த மாடலின் விற்பனை அடிதூள் கிளப்பியது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமானதும் இது மிகவும் பழைய மாடலாகி விட்டது.
கூடவே, புதிய ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமான வேகத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடலின் விற்பனையையும் நிறுத்தியுள்ளது. அதாவது இனிமேல் இந்த மாடல் ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படாது. இதற்கிடையில் தான் பிளிப்கார்ட் வலைத்தளம் ஐபோன் 12 மீது அபார சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ஐபோன் 12 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.49,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது அசல் விலையான ரூ.59,900 இல் இருந்து 16% தள்ளுபடியை பெற்று ரூ.49.999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனுடன் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.30,600 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் (Exchange Bonus) கிடைக்கும்.
இப்படியாக ஐபோன் 12 மாடலின் விலையை ரூ.19,399 ஆக குறைக்க முடியும். இதுதவிர்த்து நீங்க; எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். இப்படி எல்லா வகையான பிளிப்கார்ட் சலுகைகளையும் சரியாக பயன்படுத்தினால் ஐபோன் 12-ன் இறுதி விலையை ரூ.17,399 க்கு கொண்டுவர முடியும்.
ஆப்பிளின்அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் இனிமேல் வாங்க கிடைக்காத ஐபோன் 12-ஐ பிளிப்கார்ட் வழியாக வாங்கலாமா வேண்டமா? என்று கேட்டால்.. ஐபோன் 12 என்பது இன்னமும் பிரீமியம் அம்சங்களுடன் வரும், கொடுக்கும் பணத்திற்கு 'வொர்த்' ஆன ஒரு ஐபோன் மாடலாகவே உள்ளது. அதிலும் இது ஆபர் விலையில் கிடைத்தால்.. வாங்குபவர்களுக்கு இன்னும் லாபகரமானதாக இருக்கும்!
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி (XDR OLED) டிஸ்பிளே, ஏ14 பயோனிக் சிப், செராமிக் ஷீல்ட், ஐபி68 வாட்டர் ப்ரூஃப், 12எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், நைட் மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் ரெக்கார்டிங்குடன் கூடிய 12எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி ஐபோனும் கூட இதுதான். உங்களால் இதை சரியாக ரூ.17,399 என்கிற சலுகை விலையில் வாங்க முடியவில்லை என்றாலும் கூட, இதை ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்கினாலும் கூட.. பிளிப்கார்ட் வழங்கும் இந்த சலுகை லாபகரமானதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








