Home
Mobile

இந்தியாவில் ஐபேட் மினியின் விலைப் பட்டியல் அறிவிப்பு

By Karthikeyan
இந்தியாவில் ஐபேட் மினியின் விலைப் பட்டியல் அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது 7.9 இன்ச் ஐபேட் மினியைக் கடந்த செவ்வாய் அன்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. அதோடு இந்த ஐபேட் மினி வரும் நவம்பர் 2ல் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த ஐபேட் மினியை வாங்க பிரி ஆர்டர் செய்யலாம் என்று ஆப்பிள் அறிவித்திருக்கிறது.

விலையைப் பொருத்தவரை 16ஜிபி ஐபேட் மினி வைபை மட்டும் 329 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.17,500க்கு விற்கப்பட இருக்கிறது. 32ஜிபி ஐபேட் மினி 429 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.20,500க்கு விற்கப்பட இருக்கிறது. அதுபோல் 64ஜிபி ஐபேட் மினி 529 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.28,500க்கு விற்கப்பட இருக்கிறது.

அதே நேரத்தில் ஐபேட் மினி வைபை வைபை+ செல்லுலர்மட்டும் 16ஜிபி ரூ.25,000க்கும், 32ஜிபி ரூ.30,000க்கும் மற்றும் 64ஜிபி ரூ.35,000க்கும் விற்கப்பட இருக்கிறது.

தொழில் நுட்ப வசதிகளைப் பொருத்தமட்டில் ஐபேட் மினி 7.9 இன்ச் அளவிலான எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் களமிறங்குகிறது. அதோடு 1 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ஆப்பிள் எ5 ப்ராசஸர், பவர்விஆர் ஜிபியு, 5எம்பி ஐசைட் பின்பக்க கேமரா மற்றும் 1.2எம்பி முகப்புக் கேமரா போன்ற வசதிகளும் இந்த ஐபேட் மினியில் உள்ளன.

ஐஒஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த ஐபேட் மினி ஆப்பிள் மேப்ஸ், மேம்படுத்தப்பட்ட சிரி, புதிய சபாரிஅப், ஐக்ளவுட் சேமிப்பு, புதிய போட்டோஸ்ட்ரீம் அப், பேஸ்புக் போன்ற அப்ளிகேசன்களையும் தாங்கி வருகிறது. இந்த சாதனம் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி போன்ற அளவுகளில் வருகிறது.

இணைப்பு வசதிகளைப் பொருத்தமட்டில் இந்த ஐபேட் மினியில் லைட்டிங் போர்ட், வைபை, ப்ளூடூத் போன்ற வசதிகளும் உள்ளன. இதன் பேட்டரி 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X