ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வரும் ஐபேட் மினி 2

ஆப்பிள் களமிறக்கி இருக்கும் ஐபேட் மினி சூப்பராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிளின் ஹார்ட்வேர் கூட்டாளியான எயு ஆப்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஐபேட் மினி 2க்கான ரெட்டினா டிஸ்ப்ளேயைத் தயாரித்து வருவதாக சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 2013ன் இரண்டாவது அரையாண்டில் புதிய ஐபேட் மினி 2 டேப்லெட் 7.9 இன்ச் அளவில் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வரும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபேட் மினியில் ரெட்டினா டிஸ்ப்ளேயை வைக்காததற்காக ஏற்கனவே பல நிறுவனங்கள் ஆப்பிளை விமர்சித்து வருகின்றன. ஆனால் அவற்றை ஆப்பிள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் ரெட்டினா டிஸ்ப்ளே இல்லாத குறை ஒன்றைத் தவிர ஐபேட் மினியில் மற்ற எல்லா நவீன தொழில் நுட்பங்களும் உள்ளன. அதோடு இந்த ஐபேட் மினியில் எல்லா வகையான அப்ளிகேசன்களையும் ஆப்பிள் வைத்திருக்கிறது. ஆனால் ஏன் ஐபேட் மினியில் ஆப்பிள் ரெட்டினா டிஸ்ப்ளேயை வைக்கவில்லை என்று தெரியவில்லை.
இந்த நிலையில் எயுஒ நிறுவனம் ஐபேட் மினி 2 டேப்லெட்டுக்கான ரெட்டினா டிஸ்ப்ளேயை மிகவும் மெல்லியதாகத் தயாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதைப் பற்றி இன்னும் ஆப்பிள் வாய் திறக்கவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications