Home
Mobile

iOS 17 Update: கதை முடிஞ்சது.. இந்த 3 iPhone மாடல்களை வச்சி இருக்குறவங்க ரொம்ப பாவம்.. ஏன்னா?

உங்கள் கையில் ஒரு ஐபோன் (iPhone) இருந்தால்.. வருகிற ஜூன் 5 ஆம் தேதி என்ன நடக்கவுள்ளது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். குறிப்பிட்ட நாளில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வேர்ல்ட்வைட் டெவலப்பர்ஸ் கான்ஃப்ரென்ஸ் (Worldwide Developers Conference - WWDC) நடக்க உள்ளது!

அந்நாளில் தான், ஆப்பிளின் லேட்டஸ்ட் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 17 வெர்ஷன் (iOS 17 Version) அறிமுகமாக உள்ளது. இதற்கிடையில் 3 ஐபோன்கள் உட்பட மொத்தம் 6 ஆப்பிள் டிவைஸ்களுக்கு ஐஓஎஸ்-இன் புதிய வெர்ஷன் அணுக கிடைக்காது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 3 iPhone மாடல்களை வச்சி இருக்குறவங்க ரொம்ப பாவம்.. ஏன்னா?

மேக்ரூமர் வழியாக வெளியான தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் 6 தயாரிப்புகளுக்கான சாஃப்ட்வேர் சப்போர்ட்டை (Software Support) கைவிட உள்ளது. அந்த 6 டிவைஸ்களில் - ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகிய 3 ஐபோன் மாடல்களும் அடக்கம்.

அதாவது மேற்கண்ட 3 ஐபோன்களும் வரவிருக்கும் புதிய ஐஓஎஸ் 17 அப்பேட்டை பெறாமல் போகலாம். இதனுடன் சேர்த்து 3 ஐபாட்களும் சாஃப்ட்வேர் சப்போர்ட்டை இழக்கின்றன. முதல் ஜெனரேஷன் ஐபாட் ப்ரோ 9.7-இன்ச் மாடல், ஐபாட் ப்ரோ 12.9-இன்ச் மற்றும் ஐந்தாம் ஜெனரேஷன் ஐபாட்டிற்கு ஐபாட்ஓஎஸ் 17 அப்டேட் (iPadOS 17 Update) வராமல் போகலாம்.

இந்த 3 ஐபோன்களும், 3 ஐபாட்களும் ஏன் சாஃப்ட்வேர் அப்டேட்டிற்கான ஆதரவை இழக்கின்றன என்கிற கேள்விக்கான பதில் - மிகவும் சிம்பிள். ஏனென்றால், இந்த 6 ஆப்பிள் தயாரிப்புகளுமே மிகவும் பழையதாகி விட்டன மற்றும் ஆப்பிளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே "வயதான" யூனிட்களுக்கு ஆதரவளிக்க முடியும்.

ஏனென்றால் ஒரு பழைய ஐபோனில் அல்லது பழைய ஐபாட்டில், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் புதிய அம்சங்களையும், புதிய விஷயங்களையும் சேர்க்க முடியாது. நினைவூட்டும் வண்ணம் மேலே குறிப்பிடபட்டுள்ள 6 டிவைஸ்களும் நவம்பர் 2015 மற்றும் நவம்பர் 2017 க்கு இடையில் அறிமுகம் செய்யப்பட்டன.

மறுகையில், ஐஓஎஸ் 17 அப்டேட்டிற்கு தகுதியுடைய ஐபோன்களை பொறுத்தவரை, ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ சீரீஸ், ஐபோன் 12 சீரீஸ், ஐபோன் 12 ப்ரோ சீரீஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் லேட்டஸ்ட் ஐஓஎஸ் வெர்ஷனை பெறும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 17 வெர்ஷன் ஆனது சில பயனுள்ள புதிய அம்சங்களை கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய வெர்ஷன் ஸ்டேபிலிட்டி (நிலைத்தன்மை) மற்றும் பெர்ஃபார்மென்ஸில் (செயல்திறன்) அதிக கவனம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ப்ளூம்பெர்க்கின் அறிக்கையொன்று, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ் 17 அப்டேட் வழியாக - பெரும்பாலான ஐபோன் பயனர்களால் - மிகவும் கோரப்பட்ட அம்சங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் அதென்ன அம்சங்கள் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. வரும் வாரங்களில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகலாம்.

Best Mobiles in India

English summary
iOS 17 Update Apple To Stop Software Support For 3 iPhones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X