புதுசோ, பழசோ.. இந்த லிஸ்ட்ல இருக்குற iPhone-களை வாங்குறது தான் நல்லது! ஏன்னா?

|

நேற்று (செப்.7) இரவு நடந்த Apple நிறுவனத்தின் 'ஃபார் அவுட்' நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய iPhone 14 சீரீஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் 4 ஐபோன் மாடல்கள் அறிமுகமாகின.

புது ஐபோன்களுடன் சேர்த்து.. லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்!

புது ஐபோன்களுடன் சேர்த்து.. லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்!

உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம். ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் அதன் புதிய ஐபோன்களுடன் சேர்த்து அதன் சமீபத்திய iOS-யும் வெளியிடும்.

அப்படியாக இம்முறை, பல ஐபோன் மாடல்களுக்கு iOS 16 ஓஎஸ் அப்டேட் கிடைக்க உள்ளது. ஐஓஎஸ் 16-இன் தற்போதைய நிலைப்பாடு என்ன? இது என்னென்ன புதிய அம்சங்களை கொண்டு வரும்? எந்தெந்த ஐபோன் மாடல்கள் ஐஓஎஸ் 16-ஐ பெற தகுதி உடையவை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

iPhone 14 அறிமுகமான வேகத்தில் iPhone 13 மீது நம்ப முடியாத Price Cut!iPhone 14 அறிமுகமான வேகத்தில் iPhone 13 மீது நம்ப முடியாத Price Cut!

உலகளவில் வெளியாகும்!

உலகளவில் வெளியாகும்!

கடந்த ஜூன் மாதம் நடந்த WWDC 2022-இல் அறிவிக்கப்பட்ட iOS 16 அந்த ஏற்கனவே பீட்டா ப்ரோகிராம் வழியாக டெஸ்ட் செய்ய கிடைத்தாலும், அது ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைத்தது.

ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஓஎஸ்-ஐ வேறு எவரும் முயற்சிக்கும் முன்பாக தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பரிசோதிக்க விரும்புகிறது.

பீட்டா புரோகிராமுக்கு பிறகு, ஆப்பிள் iOS 16 பப்ளிக் பீட்டா வெளியானது. அது பரந்த அளவிலான பயனர்களுக்கு அணுக கிடைத்தது. தற்போது இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் உலக அளவில் வெளியாகி இருக்கிறது.

இனிமேல் ஐபோன் எக்ஸ்பீரியன்ஸ் வேற மாதிரி இருக்கும்!

இனிமேல் ஐபோன் எக்ஸ்பீரியன்ஸ் வேற மாதிரி இருக்கும்!

ஏனெனில் வரவிருக்கும் iOS 16 ஆனது யூசர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்தும் புதிய அம்சங்களை உள்ளடக்கியது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் லாக் ஸ்க்ரீனில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. யூசர்கள் இப்போது கஸ்டம் லாக் ஸ்க்ரீன்களை எடிட் செய்யலாம் மற்றும் கிரியேட் செய்யலாம். அத்துடன் லாக் ஸ்க்ரீன்களில் விட்ஜெட்களையும் ஆட் செய்யலாம்!

பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!பிரீமியம் போன் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டா இந்த 8-ல 1 தான் வாங்கணும்!

மெசேஜ்களை எடிட் செய்யலாம்; அன்சென்ட் செய்யலாம்!

மெசேஜ்களை எடிட் செய்யலாம்; அன்சென்ட் செய்யலாம்!

ஐஓஎஸ் 16 வழியாக, மெசேஜஸ் ஆப்பும் "கணிசமான" மேம்படுத்தலை பெற்றுள்ளது. இனிமேல் உங்களால் மெசேஜ்களை அன்சென்ட் (unsend) செய்ய முடியும் மற்றும் ஏற்கனவே அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் விருப்பத்தையும் பெறலாம்.

மேலும் ஒரே நேரத்தில் கன்டென்ட் மற்றும் டெக்ஸ்ட்-ஐ பார்க்க அனுமதிக்கும் ஷேர்பிளே (SharePlay) அம்சத்தையும் Messages App பெற்றுள்ளது. டிக்டேஷன், லைவ் டெக்ஸ்ட் மற்றும் மேப்ஸ் போன்ற பிற iOS ஆப்களும் கூட iOS 16 வழியாக பெரிய அளவிலான மேம்படுத்தல்களை பெற்றுள்ளன.

எந்தெந்த ஐபோன்களுக்கு ஐஓஎஸ் 16 கிடைக்கும்?

எந்தெந்த ஐபோன்களுக்கு ஐஓஎஸ் 16 கிடைக்கும்?

எக்கச்சக்கமான அப்டேட்களை கொண்டு வரும் ஐஓஎஸ் 16 ஆனது உங்கள் ஐபோனுக்கு கிடைக்குமா? அதாவது எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு iOS 16 அப்டேட் கிடைக்கும்? என்று தெரியுமா? இதோ ஃபுல் லிஸ்ட்!

iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone 12, iPhone 12 Mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 13, iPhone 13 Mini, iPhone 13 Pro, iPhone Pro Max, iPhone SE 2022 மற்றும் முழு iPhone 14 சீரீஸ்கும் ஐஓஎஸ் 16 அப்டேட் கிடைக்கும்!

Best Mobiles in India

English summary
iOS 16 Public Release Full List Of Apple iPhones Eligible for Latest Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X