உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
ஆப்பிள் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களை குஷிப்படுத்தும் வகையில், மிக விரைவில் அதனுடைய அடுத்த சாப்ட்வேர் அப்டேட்டை வெளியிடப்போகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் iOS 16.3 அப்டேட்டை அடுத்த வாரம் அதன் பயனர்களுக்காக வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய iOS 16.3 அப்டேட்.. ஆப்பிள் ரசிகர்கள் குஷி.! ஏன் தெரியுமா?
புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை வாங்கிய ஆப்பிள் ரசிகர்கள் இந்த அப்டேட்டிற்காக தான் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் தனது iOS 16.3 அப்டேட்டை அடுத்த வாரம் அதன் பயனர்களுக்கு வெளியிடும். இருப்பினும், இது ஏற்கனவே டெவலப்பர்கள் மற்றும் பீட்டா சோதனையாளர்களுக்கு பயன்படுத்தக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்த' சிக்கலை 'இந்த' அப்டேட் மட்டும் தான் சரி செய்யும்.!
சமீபத்திய வெளியீட்டில், புதிய iOS 16 வால்பேப்பருக்கு iOS 16.3 அப்டேட் தேவை என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியது. இது அடுத்த வாரம் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
வரவிருக்கும் iOS 16.3 அப்டேட், iPhone 14 Pro Max மாடல்களின் டிஸ்பிளேவில் தோன்றிய ஹரிசாண்டல் லைன் சிக்கல்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max பயனர்களுக்கு இது குட் நியூஸ்.!
அடுத்த வாரம் வரவிருக்கும் iOS 16 அப்டேட் உடன், நிறுவனம் இன்னும் என்னென்ன விஷயங்களை மேம்படுத்தியுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
ஆப்பிள் வெளியிடவுள்ள புதிய iOS 16.3 அப்டேட் கட்டாயம் ப்ரோ மாடல்களில் உள்ள சிக்கலை தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, சில iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max சாதனங்கள் விழித்தவுடன் காணப்படும் ஹரிசாண்டல் கோடுகளை இது சரி செய்யும்.
இந்த அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபோன் 14 சீரிஸ் பயனர்களுக்கு இது அருமையான நல்ல செய்தியாகும்.

iOS 16.3 அப்டேட்டில் டபுள் செக்யூரிட்டியா? சூப்பர்ல.!
அதேபோல், இந்த புதிய அப்டேட் ஆப்பிள் ஐடிகளைப் (Apple ID) பாதுகாக்க பிஸிக்கல் ப்ரொடெக்டிக் கீஸ்-களைப் பயன்படுத்துவதைச் செயல்படுத்தும்.
இதன் மூலம் இனி ஆப்பிள் ஐபோன் பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கான டு-பாக்டர் ஆதென்டிகேஷன் (Two-Factor Authentication) அங்கீகாரத்தை வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் ஆனது, ஃப்ரீஃபார்ம் (FreeForm) குறைபாட்டைச் சரிசெய்யும்.

அடடே.! இந்த சிக்கலையும் சரி செஞ்சுட்டிங்களா?
ஆப்பிள் பென்சில் அல்லது விரலால் டச் செய்யப்பட்ட சில டிராயிங் ஸ்ட்ரோக்குகள் பகிரப்பட்ட போர்ட்களில் காட்டப்படாத குறைபாட்டையும் இது சரி செய்கிறது.
கூடுதலாக, இந்த அப்டேட் ஹோம் லாக் ஸ்கிரீன் விட்ஜெட் ஹோம் ஆப்ஸின் நிலையைத் துல்லியமாகக் காட்டாத சிக்கலைச் சரி செய்யும். இது புதிதாக வெளியிடப்பட்ட HomePod 2nd ஜென்-க்கான ஆதரவைச் சேர்க்கும்.

iPhone மற்றும் HomePod யூசர்கள் கவனத்திற்கு.!
பிளாக் ஹிஸ்டரி மாதத்தை முன்னிட்டு புதிய பிளாக் யூனிட்டி வால்பேப்பரானது இந்த அப்டேட் உடன் கிடைக்கிறது.
அதேபோல் iPhone மற்றும் HomePod ஆகிய இரண்டிற்கும் இணங்கக்கூடிய Handoff அம்சங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பயனர்களுக்கு அறிவுறுத்தும் புதிய டுடோரியலுடன் iOS 16.3 அப்டேட் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஐபோனின் புதிய iOS 16.3 அப்டேட்டை எப்படி இன்ஸ்டால் செய்வது?
உங்கள் ஐபோனின் செட்டிங்ஸ் (Settings) பயன்பாட்டிற்குச் சென்று, மெனுவிலிருந்து ஜெனரல் (General) என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தோன்றும் துணை மெனுவிலிருந்து சாப்ட்வேர் அப்டேட் (Software Update) தேர்ந்தெடுப்பதன் மூலம், iOS 16.3 அப்டேட்டைப் பயனர்கள் அவர்களுடைய டிவைஸில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
இத்துடன் ஆப்பிள் நிறுவனம் iOS 16.3-க்கு கூடுதலாக, iPadOS 16.3, watchOS 9.3 மற்றும் tvOS 16.3 மற்றும் macOS 13.2 ஆகியவற்றின் வெளியீடும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்பிள் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








