Home
Mobile

மாஸ்க் போட்டு இது கஷ்டமா இருக்கு: இனிமே அந்த தொல்லை இருக்காது., அட்டகாச அப்டேட்!

முகக்கவசம் அணிந்திருக்கும் போது மொபைல் போனில் பேஸ் லாக் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. மாஸ்க் அணிந்திருக்கும் போது இனி அந்த தொல்லை இருக்காத வகையில் ஐபோன் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம்

சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவத் தொடங்கியது. தற்போது உலகின் 213 நாடுகளுக்கு இதன் தாக்கம் பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

3 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

3 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு

உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்கு முறையான மருந்து கண்டுபடிக்காத காரணத்தால் வைரஸை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இதை தடுப்பதன் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

அதேபோல் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிந்திருக்கும் போது மொபைல் போனில் பேஸ் லாக் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

ஐஓஎஸ் அப்டேட்

ஐஓஎஸ் அப்டேட்

இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் ஐஓஎஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் ஐஓஎஸ் 13.5 அப்டேட்டின் மூலம் பேஸ் ஐடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்த பிறகு கேமராவில் பேஸ் ஐடி ஸ்கேன் செய்யும்போது முகக்கவசம் அணிந்திருப்பது கண்டறியப்பட்டால் தானாக பாஸ்வேர்டு கேட்கும்.

ஏணைய சிறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்

ஏணைய சிறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்

முன்பாகவே அறிவித்தது போல் கூகுளுடன் இணைந்து ஆப்பிள் முன்னெடுக்கும் கான்டக்ட் ட்ரெஸிங்கிற்கான API இதில் இடம்பெறும். இதோடு இந்த அப்டேட்டின் மூலம் சிறுகுறு கோளாறுகள் சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் அறிவிப்பு ஐபோன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

source: theverge.com

Best Mobiles in India

English summary
iOS 13.5 update now Face ID to unlock your phone while wearing a face mask
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X