வருகிறது "டூயல் சிம்" ஐபோன் மற்றும் புதிய ஆப்பிள் அப்டேட்கள்.!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 12 டிவலெப்பர் பீட்டா 5, ஐபோன் மற்றும் ஐபாட்-களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 12 டிவலெப்பர் பீட்டா 5, ஐபோன் மற்றும் ஐபாட்-களுக்காக அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் காபேர்ட்டினோ ஜெயன்ட் ஊடகம், ஐபோன் நிறுவனம் டூயல் சிம் ஐபோன் தயாரிப்பில் இறங்கியுள்ளதை உறுதி செய்யும் விதமாக சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதனுடன் வயர்லெஸ் சார்ஜிங் ஏர்பாட்-கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த iOS டிவலெப்பர் பீட்டா 5 iOS 12, உலகிற்கு வரும் செப்டம்பர் இல் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய iOS பீட்டா வெர்ஷன் டிவிOS 12, மேக்OS 10.14, மற்றும் ஆப்பிள் வாட்ச்OS 5 வெளியிடப்படும்.

டூயல் சிம் வசதி
அடுத்து வர இருக்கும் புதிய ஆப்பிள் போன் மாடல்களில் டூயல் சிம் வசதி இருப்பதற்கான ஆதாரம் நம் வசம் கிடைத்துள்ளது. புதிய iOS 12 டிவலெப்பர் பீட்டா 5 வில் "இரண்டு சிம் ஸ்டேட்டஸ்"(second SIM status) மற்றும் "சிம் தட்டு ஸ்டேட்டஸ்"(SIM tray status) குறிப்பிடபத்துள்ளது. இதனால் நிச்சயம் அடுத்து வரவிருக்கும் புதிய ஆப்பிள் ஐபோன் இல் டூயல் சிம் வசதி நிச்சயம் இருக்கும்.

ஆப்பிள் iOS 12 டிவலெப்பர் பீட்டா 5 அப்டேட்
ஐபோன்,ஐபாட் மற்றும் ஐபேட் தொடுதிரை மாடல்கள் புதிய ஆப்பிள் iOS 12 டிவலெப்பர் பீட்டா 5 அப்டேட் செய்துகொள்ளலாம்.
- ஐபோன் 5S மாடல் போன் மற்றும் அதற்கு பின்னர் வந்த அனைத்து புதிய ஐபோன் மாடல்கள்
- ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ
- ஐபேட் 5 வது ஜெனெரேஷன் மற்றும் அதன் பின்னர் மாடல்கள்
- ஐபேட் மினி மற்றும் பின்னர் மாதிரிகள்
- ஐபாட் 6வது ஜெனெரேஷன்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
எப்படி iOS 12 டவுன்லோட் செய்வது
உங்கள் புதிய iOS 12 வெர்ஷன் டவுன்லோட் செய்ய Settings > General > Software Update.
உங்கள் ஐபோன் குறைந்தது 50% சார்ஜ் இருக்க வேண்டியது அவசியம், இல்லையேனில் சார்ஜ்ர் கனெக்ட் செய்து அப்டேட்டினை இன்ஸ்டால் செய்யவும். அத்துடன் உங்கள் ஆட்டோமேட்டிக் அப்டேட் சேவையை ஆக்ட்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

டிவிOS 12 டிவலெப்பர் பீட்டா 5
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவிகளுக்கு டிவிOS 12 டிவலெப்பர் பீட்டா 5 அறிமுகம் செய்துள்ளது. உங்கள் டிவியின் டால்பி அட்மோஸ்(DOLBY ATMOS) செட்டிங்ஸ் சேவையை அனுமதிப்பதுடன் முன்னாள் இருந்த பிழைகளை இதில் சரிசெய்துள்ளது.
எப்படி டிவிOS 12 டிவலெப்பர் பீட்டா 5 டவுன்லோட் செய்வது
உங்கள் ஆப்பிள் டிவலெப்பர் சென்டர் உள் சென்று உங்கள் டிவிOS 12 பீட்டா கான்பிகரேஷன் ப்ரொபைல் மூலம் உங்கள் மேக் ஆப் ஸ்டார் வழி 4வது ஜெனரேஷன் ஆப்பிள் டிவி அல்லது டிவி 4K இன்ஸ்டால் செய்து அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

மேக்OS 10.14 டிவலெப்பர் பீட்டா 5
ஆப்பிள் தனது புதிய மேக்OS 10.14 டிவலெப்பர் பீட்டா 5 இல் அதிகப்படியான புதிய வால்பேப்பர்களை அறிமுகம் செய்கிறது. இதற்கு முன்னாள் வந்த பீட்டா ரிலீஸ்ஸில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஆப் ஸ்டார் மற்றும் டார்க் மேப் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி மேக்OS 10.14 மொஜாவ் பீட்டா டவுன்லோட் செய்வது
உங்கள் புதிய மேக்OS 10.14 மொஜாவ்(Mojave) பீட்டா டவுன்லோட் செய்ய முதலில் ஆப்பிள் டிவலெப்பர் சென்டர் உள் சென்று உங்கள் அக்கவுண்ட் சைன் இன் செய்யுங்கள்
- டவுன்லோட் டேப் சென்று டவுன்லோட் பட்டன் கிளிக் செய்யுங்கள்
- டவுன்லோட் விண்டோவில் மேக்OS மொஜாவ் பீட்டா அக்சஸ் இன்ஸ்டால் ரன் செய்யுங்கள்
- macOSDeveloperBetaAccessUtility.pkg டபுள் கிளிக் செய்யுங்கள், இது உங்கள் மேக் ஆப் ஸ்டார் வழி உங்கள் பீட்டா வெர்ஷன்-ஐ இன்ஸ்டால் செய்துவிடும்.
வாட்ச்OS 5 டிவலெப்பர் பீட்டா 5
ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்காக, ஆப்பிள் தனது வாட்ச்OS 5 டிவலெப்பர் பீட்டா 5 வெளியிட்டுள்ளது. முந்தைய பிழைகளை திருத்தும் செய்து வாக்கி டாக்கி ஆப், பாட்காஸ்ட் மற்றும் சிறி(SIRI) சேவையுடன் வந்துள்ளது புதிய வாட்ச்OS 5 டிவலெப்பர் பீட்டா 5.

எப்படி வாட்ச்OS 5 டிவலெப்பர் பீட்டா 5 டவுன்லோட் செய்வது
உங்கள் ஆப்பிள் டிவலெப்பர் சென்டர் உள் சென்று உங்கள் அக்கவுண்ட் சைன் இன் செய்யுங்கள்
வாட்ச் ஆப் அல்லது உங்கள் ஐபோன் இல் General > Software Update கிளிக் செய்து அப்டேட் செய்துகொள்ளுங்கள். உங்கள் ஆப்பிள் வாட்ச் அப்டேட் செய்ய குறைந்தது 50% சார்ஜ் இருப்பது அவசியம், அத்துடன் ஐபோன் இனைக்ககூடிய வரம்பில் இருப்பதும் அவசியம்.
அனைத்து பீட்டா அப்டேட்களில் பிழைகள் இருக்குமென்பதனால் உங்கள் அப்டேட்களை இரண்டாம் நிலை சாதனத்தில் டவுன்லோட் செய்யும்படி அறிவுரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications