Home
Mobile

இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மொபைல்கள்!

By Karthikeyan
இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மொபைல்கள்!

இந்தியாவில் எப்போதுமே மலிவு விலை போன்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதனை உணர்ந்து ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மலிவு விலைக்கு விற்று வருகின்றன. அந்த வகையில் இன்டெக்ஸ் நிறுவனமும் வரும் அக்டோபரில் 5 புதிய போன்களை மலிவு விலைக்கு அதாவது ரூ.10,000க்குள் களமிறக்க இருக்கிறது.

கடந்த வாரம் இன்டெக்ஸ் எக்யுயுஎ 4.0 என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்கியது. இருந்தாலும் மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்போன் ஆகிய இந்திய நிறுவனங்கள் தங்களது குறைந்த விலை போன்கள் மூலம் இந்திய ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக இன்டெக்ஸ் இந்தியாவின் முதல் நிலை மற்றும் 2வது நிலை மாநகரங்களைக் குறிவைத்து தனது போன்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த நகரங்களில் ரூ.5,000 முதல் 10,000 வரையுள்ள தமது புதிய 5 மொபைல்களைக் களமிறக்க இருப்பதாக இன்டெக்ஸின் தலைமை மேலாளர் குமார் அறிவித்திருக்கிறார்.

இந்த 2011-2012ல் மொபைல் வர்த்தகம் மூலம் ரூ.400 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் தங்களது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இன்டெக்ஸ் நிறுவனத்தின் கனவு பலிக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X