Home
Mobile

2ஜி போனில் வீடியோ காலிங் வசதி: இன்டெக்ஸ் அறிமுகம்

By Super
2ஜி போனில் வீடியோ காலிங் வசதி: இன்டெக்ஸ் அறிமுகம்
மார்க்கெட்டில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பத்தை தனது தயாரிப்பிலும் புகுத்திவிடவேண்டும் என்பது மொபைல்போன் சந்தையில் எழுதப்படாத விதி. ஆனால், சில நிறுவனங்கள் அதி்ல் சற்று வித்தியாசமாக யோசித்து புதிய வசதியை வழங்கும்.

பொதுவாக 3ஜி தொழில்நுட்பம் கொண்ட போனில் மட்டுமே, வீடியோ காலிங் வசதி இருக்கும். ஆனால், இதிலிருந்து சற்று மாறுபட்டு 2ஜி தொழில்நுட்பம் கொண்ட போனிலேயே வீடியோ காலிங் வசதியை முதன்முறையாக கொண்டுவந்துள்ளது இன்டெக்ஸ் நிறுவனம்.

ஐஎன் 4470 என் என்ற குறியீட்டில் வந்துள்ள இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மொபைல்போன் இந்த வசதியுடன் வந்துள்ளது. பொதுவாக 3ஜி ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தில் இன்டர்நெட்டின் வேகம் அதிகம் இருக்கும்.

ஆனால், 2ஜியில் அந்த வேகத்தை பெற முடியாது என்பதாலேயே பல நிறுவனங்கள் இந்த ஐடியாவை கையில் எடுக்கவில்லை. ஆனால், இன்டெக்ஸ் நிறுவனம் 2ஜி போனில் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியதன் சூட்சுமத்தை ஆராய்ந்தபோது அதில் பெரிய உண்மை இருப்பது புலப்பட்டது.

ஆம். 2ஜி போனில் வீடியோ காலிங் வசதிக்கு கட்டணம் குறைவு. எனவேதான் இன்டெக்ஸ் இந்த ஐடியாவை கையிலெடுத்தது புரிந்தது.

இன்டெக்ஸ் ஐஎன் 4470 என் போனின் சிறப்பம்சங்கள்:

டியூவல் சிம் கார்டு வசதி

வீடியோ காலிங் வசதி

மொபைல் டிராக்

8 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறன்

ஆடியோ, வீடியோ பிளேயர்

புளூடூத் மற்றும் ஜிபிஆர்எஸ் கனெக்ட்டிவிட்டி

2000mAh பேட்டரி

ஆகிய முக்கிய அம்சங்களை பெற்றுள்ள இந்த போன் மார்க்கெட்டில் நிச்சயம் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்கும் என்று நம்பலாம். அதற்கு ஏற்றாற்போல் இந்த போனை பிரபலப்படுத்தும் வகையில் இன்டெக்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரங்கள் இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X