உடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.!

|

உள்நாட்டு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன இன்டெக்ஸ், அதன் முதல் உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன்னை அறிவித்துள்ளது. இன்டெக்ஸ் ஸ்டாரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு ஷட்டர்ப்ரூப் (shatterproof) கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.5,999/-க்கு உடைக்கமுடியாத ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரூ.5,999/- என்கிற விலையில், ஸ்னாப்டீலில் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பான பகுதி என்னவென்றால், இந்த் ஸ்மார்ட்போனுடன் ஒரு வருட ஸ்கிரீன் மாற்று உத்தரவாதம் கிடைக்கிறது. ஆக உங்களால் இதன் டிஸ்பிளேவை உடைக்க முடிந்தால், உடைத்த பின்னர், இலவசமாக ஸ்க்ரீன் மாற்றை பெறலாம்.

5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே.!

5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே.!

அம்சங்களை பொறுத்தவரை, இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஆனது, 5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 720 x 1280 என்கிற அளவிலான பிக்ஸல் தீர்மானத்தை கொண்டிருக்கிறது. அளவீட்டில் (பரிமாணங்கள்) 15.0 x 7.44 x 0.90 செமீ உள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 170 கிராம் ஆகும்.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி.!

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி.!

ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்னால் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் உட்பொதிக்கப்பட்டுள்ளது. மீடியா டெக் MT6737 SoC மூலம் இயக்கப்படும், இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஆனது 3ஜிபி அளவிலான ரேம் உடனான 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. உடன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது.

ஒரு 13 எம்பி பின்புற கேமரா.!

ஒரு 13 எம்பி பின்புற கேமரா.!

இன்டெக்ஸ் ஸ்டாரி 10 ஆனது, இரட்டை சிம் கார்டு ஆதரவு கொண்டுருக்கும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஹைபிரிட் சிம் ஸ்லாட்டா.? அதாவது ட்ரிபிள் கார்ட் ஸ்லாட்டா என்பது பற்றிய வார்த்தைகள் ஏதும் இல்லை. கேமரத்துறையை பொறுத்தவரை, ஒரு 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ப்ளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளன.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
சுமார் 200 மணி நேர காத்திருப்பு நேரம்.!

சுமார் 200 மணி நேர காத்திருப்பு நேரம்.!

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உடன் சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர்க்கான ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட்டும் உள்ளது. ஒரு 2600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனின் காத்திருப்பு நேரம் - சுமார் 200 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Intex Staari 10 is a New Entry-Level Smartphone With Unbreakable Display at Rs 5,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X