Home
Mobile

3.2 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் புதிய இன்டெக்ஸ் மொபைல்!

By Super

3.2 இஞ்ச் டச் ஸ்கிரீனுடன் புதிய இன்டெக்ஸ் மொபைல்!
புதிய மொபைல்கள், புதிய தொழில் நுட்பம் என்று வாடிக்கையாளர்கள் விரும்புவது புதுமையான விஷயத்தை தான். சென்ஸ் என்ற புதிய மொபைலை உருவாக்கி உள்ளது இன்டெக்ஸ் நிறுவனம். இந்த சென்ஸ் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை எளிதான முறையில் வழங்கும்.

இது 3.2 இஞ்ச் அகன்ற திரை வசதியை பெற்ற மொபைல். இதில் டியூவல் கேமராவும் மற்றும் இரண்டு மொழிகளை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. 3 மெகா பிக்ஸல் கேராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் இதில் உள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பத்திற்கும் இது சப்போர்ட் செய்கிறது. இதனால் பிரவுசிங் வசதியையும் பெறலாம்.

பயணங்களின் போது இனிமையாக கேட்டு மகிழ எப்எம் ரேடியோ, கேம்ஸ் போன்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுக்கு சப்போர்ட் செய்ய 1,500 எம்ஏஎச் பேட்டரியையும் இந்த மொபைல் வழங்கும். டாக் டைம் 4.5 மணி நேரமும், ஸ்டான்-பை டைம் 380 மணி நேரமும், இந்த பேட்டரியின் மூலம் எளிதாக கிடைக்கும்.

ஆடியோ ஈக்குவலைசர், டார்ச் லைட் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும் இந்த மொபைல் சோஷியல் நெட்வொர்க் வசதிக்கும் சப்போர்ட் செய்யும்.

இந்த இன்டெக்ஸ் சென்ஸ் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், நிச்சயம் இதன் விலை அனைவரையும் கவரும் வகையில் தான் இருக்கும் என்று தாரளமாக நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X