ஆடம்பரம் தேடும் மக்களை தன்வசப்படுத்தும் ராயல் மொபைல்

அந்த வகையில் அனைவரையும் முதல் பார்வையிலேயே பிரம்மிக்க வைக்கும் மொபைல் பட்டியல்களில் இன்டெக்ஸ் ராயல் மொபைலை சொல்லலாம்.
ஏனென்றால் இதன் ராஜ தோற்றமும், ஜொலிக்கும் கம்பீரமும் ராயல் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமாக இருக்குகிறது.
இன்டெக்ஸ் ராயல் மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட மொபைல்.
கலர், டிசைன், ஸ்டைல் என்று அனத்திலும் அட்டகாசப்படுத்தும் இந்த மொபைலை கையில் வைத்திருப்பவர்களையும்
ஆடம்பரமாகக் காட்டும் இந்த மொபைல் பெயரில் மட்டும் அல்ல நிஜத்திலும் ராயல் தான்.
இந்த மொபைலின் முன்புறம் முக்கால்வாசி இதன் திரையே ஆக்கிரமிக்கிறது. கீழ் பகுதியில் உள்ள மீதம் தான் இதன் கீப்பேட் இடம் பெறுகிறது.
2.6 இஞ்ச் கொண்ட கியூவிஜிஏ திரையை கொண்டிருக்கிறது.
2 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட இந்த மொபைல் சிறந்த புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்குகிறது.
மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் 32ஜிபி வரை கூடுதலாக பெற முடியும்.
வாடிக்கையாளர்கள் நிறைய பயன்பாட்டினை அடைவதற்காகவே இதில் ஜிபிஆர்எஸ், ஏ2டிபி புளூடூத், போன்ற தொழில் நுட்பம்
கொடுக்கப்பட்டுள்ளது.
8 மணி நேரம் டாக் டைம் பெற இதில் 2,200 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 395 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கிறது.
இந்த இன்டெக்ஸ் ராயல் மொபைலின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இது ரூ.2,000 விலையில் இருந்து ரூ.3000 விலை வரையில் கிடைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications