மலிவு விலையில் இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு இன்டெக்ஸ் நிறுவனம் புதிய ராயல் ரெட் எடிஷன் எலைட் டூயல் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் இயக்குனர் நிதி மார்கண்டே கூறுகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படும், மேலும் ராயல் ரெட் எடிஷன் அனைவரும் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
எலைட் டூயல் ஸ்மாரட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையா இருக்கும் எலைட் டூயல் ஸ்மார்ட்போன் மாடல்.

இன்டெக்ஸ் எலைட் டூயல் :
இன்டெக்ஸ் எலைட் டூயல் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி
வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 7.0:
இன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ்- ஏ7 செயலி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா :
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


2400எம்ஏஎச்:
எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 2400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications