Home
Mobile

கண்கவரும் புதிய இன்டெக்ஸ் கோலா மொபைல்!

By Super

கண்கவரும் புதிய இன்டெக்ஸ் கோலா மொபைல்!
குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனை தொடுதிரை வசதி கொண்ட மொபைலை உருவாக்கி உள்ளது இன்டெக்ஸ் நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் வசதியினையும் வழங்கும்.

இந்த மொபைல் 2.4 இஞ்ச் திரையில், தொடுதிரை வசதியினை வழங்கும். இந்த கோலா மொபைலின் 1.3 மெகா பிக்ஸல் கேமராவில் டிஜிட்டல் சூம் தொழில் நுட்பத்தினையும் பெறலாம்.

குறைந்த விலை என்பதற்காக, பொழுதுபோக்கு அம்சம் குறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த கோலா ஸ்மார்ட்போனில் எப்எம் ரேடியோ, எப்எம் ரெக்கார்டிங், ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், வெப் கேம் போன்ற வசதிகளையும் பயன்படுத்தலாம்.

புளூடூத் மற்றும் ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் சிறப்பான பேட்டரி வசதியினையும் கொடுக்கும். இதன் 1,000 எம்ஏஎச் பேட்டரி வசதியின் மூலம் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 3.5 மணி நேரம் டாக் டைம் போன்றவற்றினையும் பெற முடியும்.

டார்ச் வசதி என்பது மொபைல்களில் சாதாரண ஒரு வசதி தான். ஆனால் இந்த டார்ச், பல சமயங்களில் பெருமளவு உதவியாக இருக்கும். அந்த டார்ச் வசதியும் இந்த கோலா மொபைலில் உள்ளது.

கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த இன்டெக்ஸ் கோலா மொபைல், விலையிலும் சிறப்பான விலை கொண்டதாக இருக்கும்.

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கலக்கும் இந்த இன்டெக்ஸ் கோலா மொபைல் ரூ. 2,190 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X