Home
Mobile

ஹிந்தி மொழிக்கு சப்போர்ட் செய்யும் புதிய இன்டெக்ஸ் மொபைல்!

By Super

ஹிந்தி மொழிக்கு சப்போர்ட் செய்யும் புதிய இன்டெக்ஸ் மொபைல்!
தொடுதிரை வசதி கொண்ட புதிய மொபைலை உருவாக்கி உள்ளது இன்டெக்ஸ் நிறுவனம். இன்டெக்ஸ் சென்ஸ் 3.0 என்ற பெயர் கொண்ட இந்த மொபைல் 3.2 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாக ஸ்மார்ட்போன் போன்றவற்றை எதிர்பார்த்தாலும், தொடுதிரை முதல் கொண்டு சிறந்த தொழில் நுட்ப வசதிகள் பட்ஜெட் விலை கொண்ட மொபைலிலும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் சிறந்த தொழில் நுட்ப பயன்பாடுகளை, இன்டெக்ஸ் சென்ஸ் 3.0 மொபைலில் பெறலாம். இந்த மொபைலில் ஆட்டோ கால் ரெக்கார்டு, காலர் குரூப், மொபைல் ட்ரேக்கர், இ-புக் ரீடர் போன்ற பல வசதிகளை இந்த இன்டெக்ஸ் சென்ஸ் 3.0 மொபைலில் பெறலாம்.

மெமரி என்பது அடிப்படை வசதி தான் என்றாலும், இந்த வசதி மிக அவசியமானதும் கூட. ஆனால் இந்த மொபைலில் மெமரி வசதியினை 16 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். நிறைய விளையாட்டுகள் இதில் ப்ரீ-லோடடு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒரு சிறப்பாக பியானோ அப்ளிக்கேஷன் ப்ரீ-லோடடு செய்யப்பட்டுள்ளது.

சில மொபைல்கள் நிறைய அப்ளிக்கேஷன்களை வழங்கினாலும், அதை பயன்படுத்தும் அளவுக்கு, சிறப்பான பேட்டரி அந்த மொபைலில் கிடைப்பது இல்லை. இந்த இன்டெக்ஸ் 3.0 மொபைலில் 1,200 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால், 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

இதில் லோமோ என்ற கேமரா அப்ளிக்கேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழகான புகைப்படங்களையும், துல்லிமயமான வீடியோக்களையும் எடுக்க முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என்று 2 மொழிகளுக்கும் இந்த மொபைல் சிறப்பாக சப்போர்ட் செய்யும்.

கோல்டு, சில்வர் மற்றும் வைட் என்று 3 நிறங்களில் இருக்கும் இந்த மொபைலை ரூ. 3,450 விலையில் பெறலாம். இத்தகைய வசதி கொண்ட இந்த மொபைல் பட்ஜெட் விலையில் எளிதாக வாடிக்கையாளர்களால் பெற முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X