லாலிபாப் ஓஎஸ் கொண்ட முதல் இன்டெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6990 தான்
இன்டெக்ஸ் நிறுவனம் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்ட அக்வா ஸ்டார் எல் (Aqua Star L) ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் கூகுளின் புதிய ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்ட நிருவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது இன்டெக்ஸ்.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஸ்னாப்டீல் இணையதளத்தில் ரூ.6,990 விலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் கிடைக்க இருக்கின்றது.

அக்வா பவர் எஹ்டி 5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

அக்வா ஸ்டார் எல் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குவதோடு ஆட்டோ கால் ரெக்கார்டு மற்றும் இன்டெக்ஸ் சோன், ஓபேரா மினி போன்ற செயலிகளும் இருக்கின்றது.
இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி, 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் சேவைகளும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications