ரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.!

|

மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான இண்டெக்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தற்போது 'இந்தியா 5' என்ற குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.4999 என்ற சலுகை விலையில் கிடைக்கும்.

ரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.!

சிறப்பு அம்சங்கள்: இதுவொரு 4ஜி வோல்ட்டி ஸ்மார்ட்போன். 1.25GHz பவரில் குவாட்கோர் பிராஸசரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நெளகட் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க கூடியது. இரண்டு சிம்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 5 இன்ச் ஆகும். இந்த டிஸ்ப்ளே ஹெச்டி தன்மையுடன் 2.5D கர்வ் தன்மையும் கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் வலிமையான கண்ணாடியை கொண்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம், மற்றும் 16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் ஸ்டோரேஜ் தேவை என்றால் 128 ஜிபி அளவில் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் கேமிராவை பார்த்தோம் என்றால் ஆட்டோ பிளாஷூடன் கூடிய 8எம்பி செல்பி கேமிராவும், எல்.இ.டி பிளாஷுடன் கூடிய 8 எம்பி பின்பக்க கேமிராவையும் கொண்டது. மேலும் இந்த மாடலின் பேட்டரி 4000mAh என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த இந்தியா 5 மாடல் ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஎஸ், புளூடூத் வி 4.0, 3.55 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஓடிஜி சப்போர்ட் ஆகியவை உண்டு. மேலும் இதன் ஸ்விப்ட் கீபோர்டு 22 முன்னணி இந்திய மொழிகளுக்கும், 100 சர்வதேச மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய மாடலின் சிறப்பு அம்சங்களாக, இந்த போனி க்யூ ஆர் கோட் ஸ்கேனர், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஸ்ட்ரீமிங் வீடியோ மற்றும் மியூசிக் செயலிகளான கானா, அமேசான் பிரைம் வீடியோ ஆகியவை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இந்த மொபைல் நமக்கு கருப்பு நிறத்தில் கிடைக்கும்

ரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.!

இண்டெக்ஸ் டெக்னால்ஜையின் இயக்குனர் நிதி மார்க்கண்டே அவர்கள் இந்த 'இந்தியா 5' மாடல் ஸ்மார்ட்போன் குறித்து கூறுகையில், 'பயனாலிகளின் மாறிக்கொண்டிருக்கும் தேவைகளையும் அவர்களுடைய கோரிக்கைகளையும் கணக்கில் கொண்டு நாங்கள் உறுதிபட தயாரித்த மாடல் தான் இந்த இந்தியா 5 ஸ்மார்ட்போன். இந்த 4ஜி வோல்ட் மாடல் ஸ்மார்ட்போன் சிறந்த விலையில் உயர்ந்த ஹார்ட்வேர் மற்றும் சிறப்பான வசதிகள் மட்டுமின்றி பல்வேறு மக்கள் தங்கள் தாய்மொழியில் பயன்படுத்தும் வகையில் கீபோர்டு அமைக்கபப்ட்டுள்ளது. இந்த மாடல் அனைவரின் இதயங்களையும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உறுதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Intex launches Flipkart exclusive Indie 5 priced at Rs 4999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X