4000எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எலைட் இ6 அறிமுகம்.!
இன்டெக்ஸ் எலைட் இ6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
இன்டெக்ஸ் நிறுவனம் இப்போது மலிவு விலையில் சிறந்த அம்சங்களை கொண்ட எலைட் இ6 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இன்டெக்ஸ் எலைட் இ6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு நிறத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பிளிப்கார்ட் வலைதளத்தில் டிசம்பர் 15-ம் தேதி முதல் இதன் விற்பனை தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டெக்ஸ் எலைட் இ6 :
இன்டெக்ஸ் எலைட் இ6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு :
எலைட் இ6 ஸ்மார்ட்போனில் 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த எலைட் இ6 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச்:
எலைட் இ6 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
எலைட் இ6 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.6.999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications