Home
Mobile

ரூ.1,690க்கு டூவல் சிம் வசதியுடன் கூடிய மொபைலை வழங்கும் இன்டெக்ஸ்

By Karthikeyan
ரூ.1,690க்கு டூவல் சிம் வசதியுடன் கூடிய மொபைலை வழங்கும் இன்டெக்ஸ்

இந்திய மொபைல் நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் பல சூப்பரான மலிவு விலை மொபைல்களைக் களமிறக்கி இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இன்டெக்ஸ் ஒரு புதிய போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய போனுக்கு அவுரா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

குறைந்த எடையுடன் வரும் இந்த அவுரா போன் நீடித்த இயங்கு நேரத்தைக் கொண்டது. இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் டூவல் சிம் வசதி உண்டு. இதன் டிஸ்ப்ளே அளவு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த போனின் பின்புறம் 1.3எம்பி கேமரா உண்டு. ஆனால் முகப்புக் கேமரா இல்லை.

இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வசதி உள்ளதால் இதில் 16ஜிபி வரை தகவல்களை சேமித்து வைக்க முடியும். மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் ப்ளூடூத், எ2டிபி, ஜிபிஆர்எஸ், டபுள்யுஎபி மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த போனில் இருக்கும் பேட்டரி 5 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டது. இவற்றைத் தவிர்த்து இந்த போனில் மொபைல் ட்ராக்கர், பதிவு செய்யக்கூடிய வசதி கொண்ட எப்எம் ரேடியோ, டார்ச், கேம்கள் போன்றவை உள்ளன. இந்த மொபைல் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை சப்போர்ட் செய்கிறது.

மேலும் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வரும் இந்த மொபைல் ரூ.1,690க்கு விற்கப்படுகிறது. சாதாரண நுகர்வோருக்கு குறைந்த விலையில் சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே தமது நிறுவனத்தின் நோக்கம் என்று இன்டெக்சின் தலைமை மேலாளர் சஞ்சய் குமார் தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X