4ஜி வோல்ட் & ஆண்ட்ராய்டு நௌகட் உடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா செல்பீ.!
அக்வா செல்பீ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இன்டெக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போது புதிய அக்வா செல்பீ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது, இந்த ஸ்மார்ட்போன் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இன்டெக்ஸ் அக்வா செல்பீ ஸ்மார்ட்போன் பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் கருப்பு மற்றும் ரோஜா தங்கம் ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

குவாட்-கோர்:
இக்கருவியில் குவாட்-கோர் ஸ்பேரட்ரம் எஸ்சி9832ஏ சிப்செட் 1.3ஜிகாஹெர்ட்ஸ் செயலி உள்ளடக்கம், ஆண்ட்ராய்டு7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

2ஜிபி ரேம்:
அக்வா செல்பீ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (1280-720)வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:
அக்வா செல்பீ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் வைபை802.11, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்.

விலை:
இன்டெக்ஸ் அக்வா செல்பீ விலைப் பொறுத்தவரை ரூ.6,649க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications