ரூ.5,799 விலையில் கிடைக்கும் இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ்.!
இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ் ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இன்டெக்ஸ் நிறுவனம் தற்சமயம் இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,799ஆக உள்ளது. மேலும் பிளிப்கார்ட் விலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை மிக எளிமையாக வாங்க முடியும்.
இந்த இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் ஒரு நவநாகரீக சாம்பெயின் நிறம் இடம்பெற்றுள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ் பொதுவாக 5.5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-720) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

குவாட்-கோர்:
இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ்.

நினைவகம்:
இந்த இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ் ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2800எம்ஏஎச்:
இன்டெக்ஸ் அக்வா 5.5 விஆர் பிளஸ் ஸ்மார்ட்போனில் 2800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications