மூன்று முக்கிய சென்சார்களுடன் வரும் இன்டெக்ஸ் புதிய போன்

By Karthikeyan
|
மூன்று முக்கிய சென்சார்களுடன் வரும் இன்டெக்ஸ் புதிய போன்

இன்டெக்ஸ் நிறுவனம் டூவல் சிம் வசதி கொண்ட ஒரு புதிய ஆன்ட்ராய்டு போனை விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய போனிற்கு இன்டெக்ஸ் ஆக்குவா 4.0 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் ரூ.5,490க்கு விற்கப்பட இருக்கிறது.

இந்த போன் குறைந்த விலையில் இருந்தாலும் ஆன்ட்ராய்டு வசதி கொண்டிருப்பதால் விற்பனையில் சாதனை படைக்கும் என்று நம்பலாம். அதோடு இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த 3.5 இன்ச் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும். அதோடு 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகமும் மிக அபாரமாக இருக்கும்.

இந்த போன் 131எம்பி சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் 3எம்பி பின்பக்க கேமராவையும் 0.3எம்பி முகப்புக் கேமராவையும் இந்த போன் தாங்கி வருகிறது. மேலும் எப்எம் வசதியும் இந்த போனில் உண்டு.

இந்த இன்டெக்ஸ் போன் கிராவிட்டி, லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் என 3 சென்சார்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் திரையின் வெளிச்சத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 போன்களை ரூ.5000 முதல் ரூ.10,000க்குள் களமிறக்க இருப்பதாக இன்டெக்ஸ் அறிவித்திருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X