Home
Mobile

சொக்க வைக்கும் டியூவல் சிம் மொபைல்: இன்டெக்ஸ் அறிமுகம்

சொக்க வைக்கும் டியூவல் சிம் மொபைல்: இன்டெக்ஸ் அறிமுகம்
வித்தியாசமான வடிவமைப்பிலும், கண்கவரும் அழகுடனும் இப்பொழுது ஒரு அற்புதமான மொபைல் இந்திய சந்தைக்கு வந்துள்ளது.

இன் 009-டி ஃப்ளாஷ் என்ற பெயரில் புதிய மொபைலை வெளியிட்டுள்ளது இன்டெக்ஸ் நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் கார்டு வசதி கொண்டது. இது 2.4 இஞ்ச் அகன்ற திரை தொழில் நுட்பத்தைக் வழங்குகிறது. இந்த திரை நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு எதையும் தெளிவாகக் காட்டும்.

இன் 009-டி ஃப்ளாஷ் மொபைல் 3 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் விருப்பமான விஷயங்களை புகைப்படம் எடுக்கலாம். 32ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதனால் அதிகமான விஷயங்களை மொபைலில் சேகரித்துக் கொள்ள முடியும்.

இதன் ஸ்டான்டர்டு பேட்டரி மூலமாக 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 240 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினைப் பெற முடியும். இன் 009-டி மொபைலின் சூப்பர் மல்டி மீடியா தொழில் நுட்பத்தின் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ வசதியினைப் பெற்று மகிழலாம்.

புளூடூத் உள்ளதால், தகவல்களை நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்ந்து மகிழலாம். இசை கேட்க விருப்பம் உள்ளவர்கள் எப்எம் ரேடியோவை கேட்டு, நேரத்தை இனிமையான பொழுதுபோக்காக மாற்றலாம்.

யூஎஸ்பி போர்ட் உள்ளதால் கணினியில் உள்ள தகவல்களை எளிதாக பதிவேற்றம் செய்யலாம். இன்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்ட இந்த இன் 009-டி ஃப்ளாஷ் மொபைல் ரூ.5,000 விலைக்கும் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X