4ஜி வோல்ட் & ஆண்ட்ராய்டு நௌகட் உடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் 3.!

By Prakash
|

பட்ஜெட் விலையில் வெளிவரும் இன்டெக்ஸ்அக்வா ஸ்டைல் 3 (Intex Aqua Style III ) ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் வலைதளத்தில் கிடைக்கும். மேலும் இன்டெக்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள அக்வா ஸ்டைல் 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நௌகட் மற்றும் 4ஜி வோல்ட் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

இந்த இன்டெக்ஸ்அக்வா ஸ்டைல் 3 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ. 4,299க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் பல தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் சாம்பெய்ன் வண்ண விருப்பங்கள் கொண்டு வெளிவருகிறது இந்த அக்வா ஸ்டைல் 3 ஸ்மார்ட்போன்.

முழு அகல வீடியோ கிராபிக்ஸ்:

முழு அகல வீடியோ கிராபிக்ஸ்:

இன்டெக்ஸ்அக்வா ஸ்டைல் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் முழு அகல வீடியோ கிராபிக்ஸ் வரிசை கொண்ட டிஸ்பிளேவுடன் வெளிவருகிறது. மேலும் (854-480)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

இக்கருவி 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட் எஸ்சி9832ஏ செயலி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்டெக்ஸ்அக்வா ஸ்டைல் 3.

நினைவகம்:

நினைவகம்:

இந்த அக்வா ஸ்டைல் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2500எம்ஏஎச்:

2500எம்ஏஎச்:

அக்வா ஸ்டைல் 3 பொறுத்தவரை 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex Aqua Style III with 4G VoLTE Android Nougat launched in India for Rs 4299 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X