Home
Mobile

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் - ஒரு சிறப்பு பார்வை

By Meganathan

சந்தையில் எதிர்பார்த்த அளவு பிரபலம் அடையாத நிலையில் மைக்ரோமேக்ஸ், கார்பன்,செல்கான் வரிசையில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வருகிறது செல்கான் நிறுவனம்.

இன்டெக்ஸ் நிறுவனம் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இல்லாத போதும் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கும் நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நம்பிக்கையை உறுதி செய்யும் முயற்சியாக அந்நிறுவனம் இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் போனை வெளியிட்டுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல்

பெங்களூரில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அக்வா ஸ்டைல் ஸ்மார்ட் போன் உங்களுக்கு ரூ.5990க்கு சந்தைகளில் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய சந்தைகளை குறிவைத்தே இந்நிறுவனம் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டதை அடுத்து டோலிவுட் மெகா ஸ்டார் சுதீப் கையெழுத்துடன் இன்டெக்ஸ் அக்வா கிடைக்கும் என்பது உங்களுக்கு கூடுதல் ஸ்பெஷலான செய்தி.

விழாவில் சுதீப் பேசியதாவது, இன்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது இன்டெக்ஸ் நிறுவனத்தின் தனித்துவம் எனக்கு பிடிக்கும். வாடிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை குறைந்த விலையில் கொடுத்து வருவதால் தான் போட்டிகள் நிறந்த இந்திய சந்தையில் இன்டெக்ஸ் நீடித்து வருகின்றது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல்

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் சிறப்பம்சங்கள்

இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் 4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 800*480 பிக்சல் ரெசல்யூஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் வன்பொருள் முந்தைய ஐ போன் மற்றும் சேம்சங் மாடல்களில் இருந்த ஆன்டிராய்டு ஓ.எஸ்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன் வடிவமைப்பில் மெல்லியதாகவும், விலை கம்மியாக இருப்பதை மட்டும் உறுதி படுத்தியுள்ளது.

வால்யூம் பட்டன்கள் இடது புறத்தில் கைக்கடக்கமாகவே பொருத்தப்பட்டிருக்கின்றது.பவர் பட்டன்கள் வலது புறத்தில் காணலாம்.

இதை தவிற 3.5 எம்.எம் ஜாக், யு.எஸ்.பி சார்ஜர் போர்ட் மேலேயும், பிளாஷுடன் 5 எம்.எபி கேமரா இன்டெக்ஸ் லோகோவின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. மென்பொருளை பொருத்தவரை ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட் ஓ.எஸ் மூலம் இயங்குகிறது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/EugYu2s6oLw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X