8 எம்பி கேமரா கொண்ட இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II விலை ரூ. 5,999
கடந்த வாரம் ஆன்டிராய்டு லாலிபாப் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்ட இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டது. ரூ.5,999க்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் முந்தைய அக்வா ஸ்டாரில் இருந்த பெரும்பாலான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டு ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் கொண்டுள்ளதோடு டூயல் சிம் வசதியும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. மேலும் 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத், எம்எம் ரேடியோ மற்றும் மைக்ரோ யுஎஸ்பியும் இருக்கின்றது. 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கின்றது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II அக்வா ஸ்டார் வகைகளில் 6வது ஸ்மார்ட்போனாகும். முன்னதாக இந்நிறுவனம் இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் (2013), இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் எஹ்டி, இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் பவர் மற்றும் புதிதாக ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்ட அக்வா ஸ்டார் எல் போன்ற ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications