ரூ.5,777க்கு இன்டெக்ஸ் அக்வா எஸ்3 : ஆண்ட்ராய்டு 7.0.!
இன்டெக்ஸ் அக்வா எஸ்3 : 2ஜிபி ரேம்,16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது.!
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான இன்டெக்ஸ் அக்வா தற்போது புதிய இன்டெக்ஸ் அக்வா எஸ்3 என்ற மொபைல் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த மாடல் மொபைல் சந்தையில் பல்வேறு வரவேற்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தங்க நிற மாறுபாட்டில் கிடைக்கும், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு செயல்திறனைக் கொண்டுள்ளர் இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே, மற்றும் (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

8 மெகா பிக்சல்:
இன்டெக்ஸ் அக்வா எஸ்3 பின்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:
இன்டெக்ஸ் அக்வா எஸ்3 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மாலி எம்பி 512ஜிபி உடன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் 9832ஏ செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி :
அக்வா எஸ்3 பொருத்தவரை 2550எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

விலை:
இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.5,777க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications