Home
Mobile

4000எம்ஏஎச் பேட்டரி; 4ஜி வோல்ட் ஆதரவு உடன் இன்டெக்ஸ் அக்வா பவர் 4.!

இந்த ஸ்மார்ட்போன் ஒரு க்வாட்-கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத) 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனாக 1ஜிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

By Muthuraj

இன்டெக்ஸ் இந்தியாவில் அக்வா பவர் 4 ஸ்மார்ட்போனை ரூ.5,499./- என்ற பட்ஜெட் நட்பு ஸ்மார்ட்போனாக அறிவித்துள்ளது. இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அதன் பாரிய 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட் ஆதரவு திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் கருப்பு நிற வகைகளில் கிடைக்கும்.

4000எம்ஏஎச் பேட்டரி; 4ஜி வோல்ட் ஆதரவு உடன்  இன்டெக்ஸ் அக்வா பவர் 4.!

இன்டெக்ஸ் அக்வா பவர் 4 ஆனது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது. 5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ (FWVGA) 480x854 பிக்சல்கள் அளவிலான டிஎன் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஒரு க்வாட்-கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத) 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனாக 1ஜிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா பவர் 4 சாதனத்தின் கேமரா துறையை பொறுத்தமட்டில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஃப்ளாஷ் ஆதரவுடன் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த புதிய இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு கொண்ட 16ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்புடன் வருகிறது, இன்டெக்ஸ் அக்வா பவர் 4 ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. அளவீட்டில் 145x71.8x10.5 மிமீ மற்றும் 172 கிராம் எடையுடையது.

சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஸேன்டர் (Xender), கானா (Gaana), ப்ரைம் வீடியோ மற்றும் விஸ்டோசோ (Vistoso) உள்ளிட்ட சில முன் ஏற்றப்பட்ட விஏஎஸ் சேவைகளுடன் வருகிறது.

அக்வா பவர் 4 கருவியின் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான இஷிதா பன்சால், "அக்வா பவர் 4 உடன் பயனர்கள் ஒரு உச்சநிலை பேட்டரி அனுபவத்தை உணருவார்கள். மேலும் நுகர்வோர்களின் மிகவும் அவசியமான தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஸ்மார்ட்போனாக இது திகழும்" என்று கூறினார்.

Best Mobiles in India

English summary
Intex Aqua Power IV With 4000mAh Battery, 4G VoLTE Support Launched at Rs. 5,499. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X