அமேசான் : 4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா நோட் 5.5.!
இன்டெக்ஸ் அக்வா நோட் 5.5 பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
நேற்று இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா ஸ்டைல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை ரூ.4,299க்கு விற்பனைக்கு கொண்டுவந்தது, அதை தொடர்ந்து இப்போது ரூ. 5.799 விலையில் அக்வா நோட் 5.5 அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்டெக்ஸ் அக்வா நோட் 5.5 பொறுத்தவரை 4ஜி வோல்ட் மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த அக்வா நோட் 5.5 அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக்:
இக்கருவி பொதுவாக 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 720பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஉள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இன்டெக்ஸ் அக்வா நோட் 5.5 பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2800எம்ஏஎச்:
இன்டெக்ஸ் அக்வா நோட் 5.5பொறுத்தவரை 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications