Home
Mobile

புதிய டியூவல் சிம் மொபைல்போன்: இன்டெக்ஸ் அறிமுகப்படுத்துகிறது

By Super
புதிய டியூவல் சிம் மொபைல்போன்: இன்டெக்ஸ் அறிமுகப்படுத்துகிறது
ரூ.2,700 விலையில் புதிய டியூவல் சிம் மொபைல்போனை இன்டெக்ஸ் நிறுவனம் சந்தைக்கு கொண்டு வருகிறது. இன்டெக்ஸ் ஐஎன்- 4370 கூல் என்ற இந்த மாடல் வெறும் 90 கிராம் எடையை மட்டும் கொண்டுள்ளது.

இந்த மாடல் கைக்கு அடக்கமாகவும், கையாள்வதற்கு எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எம் டியூவல் சிம் வசதி கொண்ட இந்த மாடல் 900 / 1800 எம்எச்சட் வசதியும் 2.2 டிஎஃப்டி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 1,300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 4 மணி நேரம் டாக் டைமும், 260 மணி நேரம் ஸ்டான்-பை நேரத்தையும் கொடுக்கும். 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இந்தக் கேமரா துல்லியமான படங்களை அளிக்கிறது. அதிகபட்சம் 1280 X 1024 பிக்ஸல் துல்லியத்தையும் மற்றும் டிஜிட்டல் சூம் வசதியையும் கொண்டுள்ளது.

பொழுது போக்கு அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. எப்எம் ரேடியோ வசதியையும் அளிக்கிறது. ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் இதில் மிகவும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆடியோ, வீடியோ வசதிகள் எம்பி-3, டபிள்யூஏவி, டபிள்யூஎம்ஏ, 3ஜிபிபி போன்ற ஃபார்மெட்களை சப்போர்ட் செய்கிறது.

இதில் பொருத்தப்பட்டுள்ள சாஃப்ட்வேர் ஜாவா அடிப்படையில் அமைக்கப்பட்டதல்ல.ஆனால் நிச்சயம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இதில் எஸ்எம்ஸ் பதிவுகள், கால் ரெக்கார்ட்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. குறைந்தது 300 போன் நம்பர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மாடலில் ஆடிபிலிட்டி துல்லியமாக உள்ளது. இன்டெக்ஸ்-4370 மாடலில் 3ஜி கம்பாட்டிபிலிட்டி மற்றும் எட்ஜ் வசதி இல்லை. ஆனால், இதில் ஜிபிஆர்எஸ் வசதி உள்ளதால் பிரவுசிங் வசதியை எளிய முறையில் பெறலாம்.

புளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏ2டிபி புளூடூத் உள்ளதால் தகவல்களை மிகுந்த வேகத்துடன் பரிமாறி கொள்ள முடியும்.

இன்னும் கணினியில் உள்ள வசதியை மொபைலுக்கு மாற்ற 2.0 யூஎஸ்பி போர்ட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி கார்டை பொருத்துவதற்கு வசதியாக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளது. இதனால் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை விரிவுபடுத்தி கொள்ளலாம். இருளில் பயன்படுத்திக் கொள்ள டார்ச் வசதியும் உள்ளது. இத்தனை வசதகளும் கொண்ட இந்த இன்டெக்ஸ் ஐஎன்-4370 கூல் மாடல் ரூ.2,700 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X