பெங்களூரில் அமைந்த இணைய மொபைல் கழகம்...!

Written By:

இணையத்தில் Internet and Mobile Association of India என்று அழைக்கப்படும் இந்திய இணைய மொபைல் கழகம், அண்மையில், தன் முக்கிய அலுவலகத்தினை, பெங்களூருவில் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த அலுவலகம் இந்த கழகத்திற்கு மூன்றாவது அலுவலகமாகும். தென் இந்திய மாநிலங்களின் இணைய தள சேவை மற்றும் மொபைல் சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் தேவைகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும் அமைப்பாக இது இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இன்று தென் இந்திய மாநிலங்களில், இணைய சேவை மற்றும் மொபைல் சேவைகளுக்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன பெங்களூரில்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பெங்களூரில் அமைந்த இணைய மொபைல் கழகம்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய அளவில், இந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்து, இணைய சேவைப் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த அமைப்பு உதவி செய்து வருவதாக, இந்த அலுவலகத் திறப்பு விழாவில், இந்த கழகத்தின் தலைவர் டாக்டர் சுபோ ராய் தெரிவித்தார்.

பெங்களூரு, இந்திய தகவல் தொடர்புத் துறையில், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு ஈடுபாடுடையதாகப் பல ஆண்டுகள் இயங்கி வருவதால், இந்த கழகத்தின் பெங்களூரு பிரிவின் செயல்பாடுகளும், பொறுப்பும் கூடுதலாகவே அமையும் எனவும் குறிப்பிட்டார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot