வருமானத்திற்கு ஒரு நல்ல வழியை காட்டிய Instagram: எப்படி தெரியுமா?

|

இன்ஸ்டாகிராம் (Instagram) தளம் ஆனது நம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இதில் புகைப்படங்களை விட ரீல்ஸ் (Reels) மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் வருகிறது.

 இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

அதேபோல் கடந்த சில மாதங்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் (Reels) மட்டும் தான் நிரம்பி வழிகிறது. ஆனாலும் இந்த தளம் எப்போதும்நண்பர்களை இணைப்பில் வைத்திருக்க உதவுகிறது என்றே கூறலாம்.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

சூப்பரனா வசதி?

சூப்பரனா வசதி?

இதுதவிர மக்களுக்கு வருவாய் ஈட்டவும் உதவுகிறது இன்ஸ்டாகிராம். அதாவது கிரியேட்டர்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு இந்நிறுவனம்வெகுமதிகளை கூட வழங்குகிறது. தற்போது இன்னொரு சூப்பரனா வசதியையும் கொண்டுவந்துள்ளது இன்ஸ்டாகிராம்.

பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!

 டிஜிட்டல் கடைகள்

டிஜிட்டல் கடைகள்

அதாவது இன்ஸ்டாகிராம் தளத்தில் டிஜிட்டல் கடைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இதன் மூலம் சிறுகுறு வணிகர்களைஇன்ஸ்டா பக்கம் தங்கள் வசம் ஈர்க்கிறது என்றே கூறலாம்.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

சிறப்பான அம்சங்கள்

சிறப்பான அம்சங்கள்

தற்போது சிறு வணிகர்களுக்கு தகுந்த பல அசத்தலான அம்சங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வணிகர்களுடன்பயனர்கள் அரட்டைகளை மேற்கொள்ளவும், பின்பு அந்த இடத்திலேயே பணத்தை செலுத்துவதற்கும் வழிவகை செய்துதரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!

பணத்தை செலுத்தும் முறை

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், வணிகர் பட்டியலிட்டிருக்கும் பொருள் பிடித்திருந்தால், உடனே அவருடன் நேரடியாக அந்த பொருள் குறித்து சாட் பாக்ஸில் கேட்டறிந்து, அதிலேயே பணத்தை செலுத்தும் முறையை தான் தற்போது இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வணிகர்கள் கட்டணத்தை கோரவும் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

மெட்டா பே வசதி

மெட்டா பே வசதி

இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சம் மெட்டா பே (Meta Pay) வசதியை உள்ளடக்கியதாக இருக்கும். பின்பு நீங்கள்
செலுத்தும் பணம், வணிகர்கள் பெறும் கட்டணம் அனைத்தும் மெட்டா பே வதிகளின்படி கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது தவறுகள் நடக்காமல் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

 சிறு வணிகர்கள் கவனிக்க வேண்டியது இதுதான்

சிறு வணிகர்கள் கவனிக்க வேண்டியது இதுதான்

இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதியில் சிறு வணிகர்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன தெரியுமா? அதாவது கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியும், கொள்முதல் விவரங்களை உறுதிபடுத்த முடியும், பொருள் விளக்கம் மற்றும் கட்டண கோரிக்கைகளை உருவாக்கலாம்.

பின்பு டிஜிட்டல் கடைகளை உருவாக்க முடியும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு தளங்களிலும் இணைந்து செயல்பட முடியும்.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

பயனுள்ள வகையில் இருக்கும்

பயனுள்ள வகையில் இருக்கும்

கண்டிப்பாக இதுபோன்ற புதிய வசதிகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். அதாவது அரட்டையில் பணம் செலுத்துதல் போன்றஅம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!

ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டை

ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டை

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவர்களின் ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டை போன்ற ஐடியைப் பதிவேற்றும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்கள் வயதைச் சரிபார்க்க உதவும் புதிய விருப்பங்களை நிறுவனம் சோதிப்பதாகக் கூறியுள்ளது.

தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

இன்ஸ்டாகிராம்

குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் வயதுக்கு ஏற்ற அனுபவங்களை வழங்கும் முயற்சியிலும் நிறுவனம் களமிறங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட "இதையெல்லாம்" கண்ட்ரோல் செய்யலாமா? அடடே!

 பாதுகாப்பு வசதி

பாதுகாப்பு வசதி

குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் தொடங்கி, இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்கள் பிறந்த தேதியைத் திருத்த முயன்றால், இனி Instagram அவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டிய விருப்பங்களைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம்

அதேபோல் இன்ஸ்டாகிராம் தளத்தில் விரைவில் பல புதிய அம்சங்களை கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இனிமேல் இந்த
தளத்தில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Instagram's New Feature Lets Users Shop Directly in Chats: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X