5000எம்ஏச் பேட்டரி உடன் வெளிவரும் அட்டகாசமான இன்ஃபோகஸ் டர்போ 5.!
இன்ஃபோகஸ் டர்போ 5 : 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.!
இன்ஃபோகஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் புதிய இன்ஃபோகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போனினை இன்று வெளியிட இருக்கிறது.மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது, 5000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மொபைல் மாடல்களை விட இவற்றின் தரம் சற்று உயர்வாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.2அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (720-1280) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு செயல்திறன்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இன்ஃபோகஸ் டர்போ 5 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 2/3ஜிபி ரேம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.11, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
இன்ஃபோகஸ் டர்போ 5 பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications