அதிரடி விலைகுறைப்பில் இன்ஃபோகஸ் டர்போ 5.!

டர்போ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்(1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash
|

இன்ஃபோகஸ் நிறுவனம் இப்போது டர்போ 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொண்டு இந்த இன்ஃபோகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இன்ஃபோகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இரட்டை சிம் ஆதரவு கைரேகை சென்சார் போன்ற வசதிகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விலைகுறைப்பு :

விலைகுறைப்பு :

இன்ஃபோகஸ் டர்போ 5 பொறுத்தவரை தற்சமயம் 500-வரை விலைக்குறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.6,999-ஆக இருந்தது. அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிக எளிமையாக
வாங்க முடியும்.

இன்ஃபோகஸ் டர்போ 5 :

இன்ஃபோகஸ் டர்போ 5 :

டர்போ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இன்ஃபோகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போனில் குவாட்கோர், மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த டர்போ 5
ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ
கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 5000எம்ஏஎச்:

5000எம்ஏஎச்:

இன்ஃபோகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
InFocus Turbo 5 price slashed but for a limited time ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X