டூயல் கேமரா & கைரேகை சென்சார் அமைப்புடன் வெளிவரும் இன்போகஸ் டர்போ 5 பிளஸ்.!
இன்போகஸ் டர்போ 5 பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
இன்போகஸ் நிறுவனம் கூடிய விரைவில் இன்போகஸ் டர்போ 5 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இவற்றில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் கைரேகை சென்சார் மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் பேட்டரி அம்சம் போன்ற நீண்ட நேரம் இணையம் மற்றும் விளையாட்டுப் பயன்பாடுகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இன்போகஸ் டர்போ 5 ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போகஸ் டர்போ 5:
இன்போகஸ் டர்போ 5 பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:
இன்போகஸ் டர்போ 5 பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த இன்போகஸ் டர்போ 5 ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2/3ஜிபி ரேம் மற்றும் 16/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

5000எம்ஏஎச்:
இன்போகஸ் டர்போ 5 பொறுத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications