Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?
ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் என்றால், அது Infinix நிறுவனமாகத் தான் இருக்க வேண்டும்.
இந்த 2022 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து, இன்பினிக்ஸ் நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை, மலிவு விலை முதல் துவங்கி, பட்ஜெட் செக்மென்டை கடந்து, பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வரை தனது போர்ட்போலியோவை விரிவுபடுத்தியுள்ளது. இந்த வரிசையில் நிறுவனம் இப்போது Infinix Zero Ultra என்ற போனை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக Infinix Zero Ultra என்ற புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
உலக ஸ்மார்ட்போன் சந்தைக்கு இன்பினிக்ஸ் நிறுவனம் இப்போது புதிதாக Infinix Zero Ultra என்ற புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது .
இந்த ஸ்மார்ட்போன் 120Hz AMOLED டிஸ்பிளேவுடன், 200MP கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இது தரமான மீடியாடெக் டைமென்சிட்டி 920 சிப்செட் உடன் 8ஜிபி ரேம் இல் இயங்குகிறது. இந்த சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Infinix Zero Ultra ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
Infinix இன் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.8' இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 900 nits பீக் பிரைட்னெஸ் ஆதரிக்கும் வளைந்த டிஸ்ப்ளே பேனல் வடிவத்தை கொண்டுள்ளது.
அதாவது, கர்வுட் டிஸ்பிளேவுடன் இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது. Infinix Zero Ultra ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 920 சிப்செட்டை கொண்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் 200 மெகாபிக்சல் கேமரா அம்சம்
Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட XOS 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. கேமரா அம்சத்தைப் பொறுத்த வரையில், இந்த புதிய Infinix Zero Ultra ஸ்மார்ட்போன் நம்ப முடியாத வகையில், 200 மெகாபிக்சல் கொண்ட கேமராவுடன் வருகிறது. ஆம், இந்த புதிய Infinix இன் சமீபத்திய ஃபிளாக்ஷிப் டிவைஸ் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் பிரைமரி கேமரா 200MP சென்சர் உடன் வருகிறது.

200MP பிரைமரி ஷூட்டர் உடன் எத்தனை கேமரா?
இந்த சென்சார், 1/1.22 இன்ச் சென்சார் அளவு கொண்ட OIS உடன் இயங்கும் 200MP பிரைமரி ஷூட்டராக உள்ளது. இதுதவிர, 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது டூயல்-எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது.
Infinix Zero Ultra போனின் முன்பக்க கேமராவை பற்றிப் பேசுகையில், இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பை ஆதரிக்கும் டூயல் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 32MP ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது.

180W தண்டர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம்
புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 180W தண்டர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
Infinix Zero Ultra சாதனம் சார்ஜிங் மற்றும் டேட்டா எக்ஸ்சேஞ் அம்சத்திற்காக டைப்-சி போர்ட்டை பேக் செய்கிறது.
இது 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லாததால், ஆடியோ டைப்-சி போர்ட் வழியாக கனெக்டர் யூஸ் செய்து ஹெட்போன்ஸ் பயன்படுத்த வேண்டும். அல்லது, ப்ளூடூத் இயர்போன்ஸ் பெஸ்டான தேர்வு.

Infinix Zero Ultra விலை என்ன?
இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது. Infinix Zero Ultra ஆனது Coslight Silver மற்றும் Genesis Noir ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.
இது 5G, டூயல்-சிம், WiFi 6, புளூடூத் 5.2, GPS, Glonass மற்றும் Beidou போன்ற ஆதரவுகளை ஆதரிக்கிறது. உலக சந்தையில், இந்த Infinix Zero Ultra ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் $520 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 42,500 ஆகும்.

Samsung, Xiaomi, Nokia, Motorola பிராண்ட்களை எப்படி Infinix பின்னுக்கு தள்ளியது?
தெரியாதவர்களுக்கு, Samsung, Xiaomi, Nokia, Motorola போன்ற முன்னணி பிராண்ட்கள் அவர்களின் வரிசையில் 200MP கேமரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை சேர்த்துள்ளனர். இதில் சில மாடல்கள் மட்டுமே அறிமுகமாகியுள்ளது.
இன்னும் சில மாடல்கள் அறிமுகமாகத் தயாராகி வருகிறது. இந்த முன்னணி பிராண்ட்களில் இருந்து கிடைக்கும் 200MP கேமரா போன்களின் விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டி செல்கிறது.
ஆனால், இன்பினிக்ஸ் அறிமுகம் செய்த இந்த டிவைஸ் வெறும் ரூ.42,500 விலைக்குள் 200MP கேமராவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications