Home
Mobile

அசூர டிஸ்கவுண்ட்.. ரூ.27,000 போதும்.. 200MP கேமரா.. 180W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) 200எம்பி கேமரா, 180W சார்ஜிங், 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா (Infinix ZERO ULTRA) போனுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா அம்சங்கள் (Infinix ZERO ULTRA Specifications): இந்த இன்பினிக்ஸ் போன் 6.8 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டிபிளஸ் (Full HD+) கொண்டுள்ளது. இதுவொரு 3டி கர்வ்ட் அமோலெட் (3D curved AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 பீக் பிரைட்னஸ் வருகிறது.

அசூர டிஸ்கவுண்ட்.. ரூ.27000 போதும்.. 200MP கேமரா.. 180W சார்ஜிங்!

இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் கண்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க ஐ கேர் மோட் (Eye Care Mode) வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 12 (XOS 12) கொண்டுள்ளது.

இந்த இன்பினிக்ஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 920 6என்எம் (Octa Core MediaTek Dimensity 920 6nm) சிப்செட் வருகிறது. அதோடு கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali - G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

டூயல் நானோ சிம் கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ராவில் பிரம்மாண்ட ரியர் கேமரா சிஸ்டம் (Rear Camera System) வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். அதோடு 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

இந்த கேமராவோடு டூயல் எல்இடி பிளாஷ் (Dual LED Flash) இடம் பெற்றுள்ளது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதற்கும் எல்இடி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் டிஸ்பிளே மாடல் என்பதால், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ சப்போர்ட் உள்ளது. இந்த இன்பினிக்ஸ் போனில் மற்றொரு பிரம்மாண்ட அம்சமாக 180W தண்டர் சார்ஜ் (Thunder Charge) சப்போர்ட் கொண்ட 4500mAh பேட்டரி வருகிறது. மேலும், ப்ளூடூத் 5.2, 5ஜி என்எஸ்ஏ (5G NSA), ஜிபிஎஸ் (GPS) மற்றும் வை-பை 802 கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடலானது, காஸ்லைட் சில்வர் (Coslight Silver) மற்றும் ஜெனிசிஸ் நோயர் (Genesis Noir) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டில் (Flipkart) இந்த போனை ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆர்டர் செய்தால் ரூ.2,925 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதோடு ரூ.24,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. மேலும், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

இப்படி ஏராளமான சலுகைகள் இந்த போனுக்கு கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் விலையை விட கம்மியான பட்ஜெட்டில் 180W சார்ஜிங், 200 எம்பி கேமரா போன்ற பக்கா பிரீமியம் அம்சங்கள் கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix ZERO ULTRA Under Rs 30000 With Offer On Flipkart Big Billion Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X