Home
Mobile

180W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்தியாவில் களமிறங்கும் Infinix போன்: எப்போது அறிமுகம்.!

சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் 200எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனமும் புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி (Infinix Zero Ultra 5G)ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்த மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் துவக்கத்தில் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்த போன் 200எம்பி கேமரா, 200 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சிறந்த வடிவமைப்பு

சிறந்த வடிவமைப்பு

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இணையத்தில் கசிந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 அசத்தலான சிப்செட்

அசத்தலான சிப்செட்

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 920 5G சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனைநம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் சிறப்பான அம்சம் என்னவென்றால் அது பாஸ்ட் சார்ஜிங் வசதி தான். அதாவது இந்த போன் 180 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வெறும் 4 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பேட்டரியைப் போன்றே கேமராவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

200எம்பி கேமரா

200எம்பி கேமரா

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 200எம்பி கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. 200எம்பி கேமரா இதில் உள்ளதால் தௌவான படங்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 8ஜிபி ரேம்

8ஜிபி ரேம்

குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Zero Ultra 5G with 80W Charging Adapter will be launched in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X