Home
Mobile

ஆர்டர் சும்மா அள்ள போகுது.. யாரும் நினைக்காத Cheap ஆன விலையில் Infinix Zero Flip போன்!

இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் (Infinix Zero Flip) - இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன், நாளை (அதாவது அக்டோபர் 17 ஆம் தேதி அன்று) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலைப்பாட்டில் இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஃபிளிப்-ஸ்டைல் ​போல்டபிள் போனின் விலை வரம்பு (Price Range) மற்றும் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி உள்ளது. இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

இதுவரை உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் ஆனது 70வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (70W Wired Fast Charging Support) 4720எம்ஏஎச் பேட்டரியுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய வேரியண்ட் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 3.64-இன்ச் அமோஎல்இடி கவர் டிஸ்பிளேவை (AMOLED Cover Display) பேக் செய்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாரும் நினைக்காத Cheap ஆன விலையில் Infinix Zero Flip போன்!

நினைவூட்டும் வண்ணம், இது 6.9 இன்ச் இன்னர் டிஸ்பிளே (Inner Display) மற்றும் 3.64 இன்ச் கவர் டிஸ்பிளேவுடன் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்பினிகஸ் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் (Global Variant) ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8020 (MediaTek Dimensity 8020) சிப்செட்டில் இயங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்பினிகஸ் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது தீவிரமான நிலைமைகளின் (Extreme conditions) கீழ் கூட, சிறப்பாக செயல்படுவதாகவும், மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான குறைந்த வெப்ப நிலையில் கூட இன்பினிகஸ் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும் என்றும் இன்பினிக்ஸ் நிறுவனம் கோருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) உட்பட16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியமாக இன்பினிகஸ் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஏஐ ஏரேசர் (AI Eraser), ஸ்மார்ட் கட்அவுட் (Smart Cutout) மற்றும் ஏஐ ஸ்கெட்ச் (AI Sketch) போன்ற பல ஏஐ டூல்களையும் கொண்டிருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilisation - OIS) உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்ப்ளே செல்பீக்களுக்காக 50 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. இது கோப்ரோ (GoPro) கேமராக்கள் உடனான ஒருங்கிணைப்பிற்கான கோப்ரோ மோட்-ஐயும் (GoPro Mode) வழங்குகிறது.

இன்பினிகஸ் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனின் விலை வரம்பு எப்படி இருக்கும்? அக்டோபர் 17 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனின் விலை வரம்பை உறுதி செய்துள்ளது. இன்பினிக்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் இது ரூ.55,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் உலகளாவிய சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் $600 (தோராயமாக ரூ. 50,200) க்கு அறிமுகமாகி உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த விலை வரம்பு உண்மையாகும் பட்சத்தில், இன்பினிகஸ் ஸீரோ ஃபிளிப் ஆனது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் கிளாம்ஷெல்-ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகமாறும் . டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ்-ன் (Transsion Holdings) மற்றொரு நிறுவனமான டெக்னோ (Tecno) அதன் ஃபாண்டம் வி ஃபிளிப் (Phantom V Flip) ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ 54,999 க்கு விற்பனை செய்வதும் இங்கே குறிப்பிடத்தக்கத்து.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero Flip Price Range Revealed Ahead India Launch on October 17 Could Be Under Rs 55000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X