Home
Mobile

Samsung பாவம் டா யப்பா.. பாதி விலையில் Infinix Zero Flip போன்.. மூன்று 50MP கேமரா, AI Vlog Mode, 70W சார்ஜிங்!

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் முதல் ஃபிளிப் ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் (Infinix Zero Flip) மாடலின் இந்திய வெளியீட்டு தேதி (India Launch Date) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்பின்க்ஸ் ஸீரோ ஃபிளிப்பின் இந்திய விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 மாடலை விட மிகவும் மலிவானதாக (பாதிக்கு பாதி விலை), மோட்டோரோலா ரேஸ்ர் 50 மாடலுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. அப்படி என்ன விலை? இது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:

இன்பினிக்ஸ் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? அக்.17 அறிமுகத்திற்கு முன்னதாக, இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனை பற்றிய பல முக்கிய அம்சங்கள் டீஸ் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி ஸீரோ ஃபிளிப்பில் மொத்தம் மூன்று 50எம்பி கேமரா சென்சார்கள் இடம்பெறும்.

Infinix Zero Flip போன்: மூன்று 50MP கேமரா, AI Vlog Mode, 70W சார்ஜிங்!

ரியர் கேமரா செட்டப் ஆக ஓஐஎஸ் (OIS - Optical Image Stabilization) ஆதரவு உடனான 50எம்பி ப்ரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா செயல்படும். இதில் டூயல் எல்இடி ப்ளாஷ் (Dual LED Flash) ஆதரவும் அடக்கம். செல்பீ கேமராவாக 50எம்பி சாம்சங் சென்சார் பேக் செய்யப்படும். இதுவொரு ஃபிளிப் போன் என்பதால் இதன் ரியர் கேமராக்களை செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக பயன்படுத்தலாம்; புரிதலுக்காகவே முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்று குறிப்பிட்டுளோம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது 4கே 60எஃப்பிஎஸ் (4K 60fps) வரையிலான வீடியோக்களை ரெக்கார்ட் செய்யும் ஆதரவையும் கொண்டுள்ளது. இதுதவிர்த்து ஸீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனில் பிரத்யேக ஏஐ வ்லாக் மோட் (AI vlog Mode), டூயல் வியூ மோட் (Dual View Mode) மற்றும் கோ ப்ரோவிற்கான இணக்கத்தன்மையுடன் (Compatibility for Go Pro) வரும் என்றும் இன்பினிக்ஸ் கூறுகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஏற்கனவே மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், இந்த ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. டிஸ்பிளேவை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 1080 x 2640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.9 இன்ச் LTPO AMOLED இன்னர் டிஸ்பிளேவை (Inner Display) கொண்டிருக்கும்.

கூடவே 1056 x 1066 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 3.64 இன்ச் எக்ஸ்டர்னல் AMOLED டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 8020 (MediaTek Dimensity 8020) சிப்செட் மூலம் இயக்கப்படும். இது மாலி ஜி77 எம்சி9 ஜிபியு (Mali G77 MC9 GPU), 8ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் 4,720mAh பேட்டரியுடன் வரும். இது 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை பெறும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கிய அம்சத்தை பொறுத்தவரை இது ஜேபிஎல் (JBL) ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர் செட்டப் (Dual Speaker Setup) வர வாய்ப்புள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், உலகளவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.50,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதே போன்ற விலை நிர்ணயத்தைஎதிர்பார்க்கலாம் . எப்படி பார்த்தாலும் இது சுமார் ரூ.60,000 என்கிற வரம்பில் தான் அறிமுகம் செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero Flip India Launch on October 17 Key Specifications Expected Price All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X