Home
Mobile

அக்டோபர் 17 உறுதி.. 50எம்பி கேமரா.. 70W சார்ஜிங்.. இந்தியாவுக்கு வரும் Infinix Flip போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் (Infinix Zero Flip) போனை கடந்த வாரம் உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் அக்டோபர் 17-ம் தேதி இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் அம்சங்கள் (Infinix Zero Flip Specifications): 6.9-இன்ச் மடிக்கக்கூடிய எல்டிபிஒ அமோலெட் ஃபுல் எச்டி பிளஸ் (LTPO AMOLED FHD+) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த மெயின் டிஸ்பிளேவில் 1080 x 2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 17 உறுதி.. இந்தியாவுக்கு வரும் Infinix பிளிப் போன்..

அதேபோல் அவுட்டர் டிஸ்பிளே எனப்படும் 2-வது டிஸ்பிளேவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த 3.64-இன்ச் அமோலெட் டிஸ்பிளே ஆனது 1056 x 1066 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிறிய டிஸ்பிளேவை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சாம்சங் ஜிஎன்5 மெயின் சென்சார் (Samsung GN5 main sensor)+ 50எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

இதுதவிர 4கே வீடியோ பதிவு, டிவி மோட் (DV mode), கோப்ரோ மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு அறிமுகமாகும் இந்த புதிய போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 512ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போன். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), ஜேபிஎல் (JBL) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அக்டோபர் 17 உறுதி.. இந்தியாவுக்கு வரும் Infinix பிளிப் போன்..

வைஃபை 6 (Wi-Fi 6), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), என்எப்சி (NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போனில் உள்ளது. மேலும் 4720mAh பேட்டரி மற்றும் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும். எனவே இந்த போனை வங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

ராக் பிளாக் (Rock Black) மற்றும் ப்ளாசம் க்ளோ (Blossom Glow) நிறங்களில் இந்த போன் இந்தியாவில் வெளியாகும். ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போன் ஆனது ரூ.54,199-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero Flip India Launch Date Announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X