Home
Mobile

சொன்னதை செஞ்சுக்காட்டிய சீனக்கார Mobile பிராண்ட்.. குறைந்த விலையில் பிலிப் போன்.. என்ன மாடல்? என்ன விலை?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் மலிவு விலையில் இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) என்ற புதிய ஃபிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாத மிகமிக குறைந்த விலையில், முதல் முறையாக பல அம்சங்களை அடக்கிய பிலிப் மாடல் மொபைல் சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. மலிவு விலையில் பிலிப் போன்களை வாங்க விரும்புவோருக்கு இந்த போன் ஒரு கூர்ந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

நீண்ட காலமாக பட்ஜெட் விலையில் பிலிப் போன் எதிர்பார்த்தவர்களின் கனவை Infinix நிறுவனம் இப்போது இப்போது, இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) ஸ்மார்ட்போன் மூலம் நிஜமாக்கியுள்ளது. பிலிப் ஸ்மார்ட்போன் சந்தை இப்போது வளர்ந்து வரும் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சந்தையாக மாறிவருகிறது. இந்த சந்தையில் ஏற்கனவே சில முக்கிய பிரபலமான நிறுவனங்கள் அவற்றின் பிலிப் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

சொன்னதை செஞ்சுக்காட்டிய சீனக்கார Mobile பிராண்ட்.. குறைந்த விலை Flip..

இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G):

குறிப்பிட்டு கூறும் வகையில், பிலிப் ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் (Google), மோட்டோரோலா (Motorola), சாம்சங் (Samsung) போன்ற பெரிய ஜாம்பவான் மொபைல் பிராண்டுகள் இப்போது ஆதிக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த நிறுவனங்களின் பிலிப் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் குறைந்தது ரூ.80,000 விலைக்கு மேல் உள்ளன. சில போன்கள் ரூ. 1 லட்சம் விலையை தாண்டி கூட செல்கின்றன.

இத்தனை நாட்களாக பட்ஜெட் பிரியர்கள் எல்லாம் பிலிப் ஸ்மார்ட்போன் வாங்க முடியுமா? என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கும் விதமாக புதிய இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) ஸ்மார்ட்போனின் வருகை அமைந்துள்ளது. இந்த புதிய சாதனத்தை நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிலிப் ஸ்மார்ட்போன் வரிசையில், குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போனில் என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.9" இன்ச் அளவு கொண்ட 1080 x 2640 பிக்சல் உடைய 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட LTPO AMOLED டிஸ்பிளேவை இது கொண்டிருக்கும். இதன் 2வது டிஸ்பிளே 3.64" இன்ச் அளவுடன் 1056 x 1066 பிக்சல் உடைய AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த இரண்டு டிஸ்பிளேவும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை பெறுகின்றன.

இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி என்ற பிலிப் போன் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 பிராசஸர் (MediaTek Dimensity 8020 processor) உடன் வரும். இது 16GB மொத்த ரேம் அம்சத்துடன் வருகிறது. இது 8GB LPDDR4X ரேம் உடன் 8GB விர்ச்சுவல் ரேம் ஆதரவை வழங்குகிறது. இது 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இந்த போனில் 50MP + 50MP கொண்ட டூயல் கேமராவை வழங்கப்பட்டுள்ளது. இது 32MP செல்பி கேமராவை கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 14 உடன் HiOS 14.5 இல் இயங்கும் இயங்குதளத்தை கொண்டிருக்கும். இந்த போனில் AI அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பிலிப் போன் இதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை இன்பினிக்ஸ் நிறுவனம் ஈர்க்க உள்ளது.

இது 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11ax (2.4GHz/5GHz), Bluetooth 5.2, GPS, USB Type-C, NFC இணைப்பு அம்சங்களுடன், 4720mAh பேட்டரி மற்றும் 70W அல்ட்ரா சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வேகமாக சார்ஜ் ஏறும் அம்சத்தை கொண்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 53,435 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்பொழுது இந்த போன் இன்னும் 2000 ரூபாய் குறைந்த விலையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix ZERO Flip 6.9 Inch 120Hz LTPO Display 3.64 Inch External 120Hz AMOLED Screens Price and Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X