Home
Mobile

சீனாக்காரன் செஞ்சுட்டான்யா.. உலகின் முதல் மலிவு விலை Flip போன்.. ரூ.50,000 கூட இல்லை.. என்ன விலை? என்ன மாடல்?

பட்ஜெட் பிரெண்ட்லி விலையில், பிரீமியம் அம்சங்களை பேக் செய்து, சக்திக்கு சக்தி, ஸ்டைலுக்கு ஸ்டைல், ஆடம்பரத்திற்கு ஆடம்பரம் என்று எல்லா வகையான திறன்களையும் ஒரே போனில் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மலிவு விலையில் உலகத்தின் முதல் பிலிப் டைப் ஸ்மார்ட்போன் (Flip smartphone) சாதனத்தை இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆம், இதுவரை சந்தைக்கு வராத மிகமிக குறைந்த விலையில் இந்த பிலிப் ஸ்மார்ட்போன் சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன மாடல்? இதன் விலை என்ன? என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் மலிவு விலையில் இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) என்ற பிலிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக டீஸரை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக பட்ஜெட் விலையில் பிலிப் போன் எதிர்பார்த்தவர்களின் கனவை இன்பினிக்ஸ் நிறுவனம் இப்போது நிஜமாக்கியுள்ளது என்றே நாம் கூறவேண்டும்.

சீனாக்காரன் செஞ்சுட்டான்யா.. உலகின் முதல் மலிவு விலை Flip போன்..

சீனாக்காரன் செஞ்சுட்டான்யா.. உலகின் முதல் மலிவு விலை Flip போன்:

பிலிப் ஸ்மார்ட்போன் சந்தை இப்போது வளர்ந்து வரும் ஒரு புதிய சந்தையாக திகழ்கிறது. இதில், கூகுள் (Google), மோட்டோரோலா (Motorola), சாம்சங் (Samsung) போன்ற பெரிய ஜாம்பவான் மொபைல் பிராண்டுகள் இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த நிறுவனங்களின் பிலிப் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் குறைந்தது ரூ.80,000 விலைக்கு மேல் உள்ளன. சில போன்கள் ரூ. 1 லட்சம் வரை கூட செல்கிறது.

இதனால், பிலிப் ஸ்மார்ட்போன் சாதனங்கள் பட்ஜெட் பிரியர்களின் கரங்களுக்கு இதுவரை எட்டா கனியாக இருந்து வந்தது. இதை உடைக்கும் விதமாக இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை ரூ. 49,990 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.

இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி சிறப்பம்சம் (Infinix Zero Flip 5G Specifications):

இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி (Infinix Zero Flip 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.7" இன்ச் அளவு கொண்ட FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும், இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட ஆதரவை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் 2வது டிஸ்பிளே 3.64" இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த இரண்டு டிஸ்பிளேவும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவை கொண்டிருக்கும்.

இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ பிலிப் 5ஜி என்ற பிலிப் போன் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 பிராசஸர் (MediaTek Dimensity 8020 processor) உடன் வெளிவரும். இது 16GB LPDDR4X ரேம் உடன் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் 50MP + 10.8MP கொண்ட டூயல் கேமராவை கொண்டிருக்கும். இது 12MP செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 14 உடன் XOS 14.5 இல் இயங்கும் இயங்குதளத்தை கொண்டிருக்கும். இந்த போனில் AI அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பிலிப் போன் ரூ. 49,000 விலைக்குள் ஒரு மலிவு விலை சாதனமாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை இன்பினிக்ஸ் நிறுவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Zero Flip 5G Is The New Budget Flip Smartphone Coming To Indian Market Under Rs 49990 Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X