இன்பினிக்ஸ் ஜீரோ 8i விரைவில் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

|

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக இன்று அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் டிசம்பர் 2 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 8i விரைவில் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை?

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் சாதனத்தை பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜீரோ 8i போனின் விலை பி.கே.ஆர் 34,999 ஆகும், இந்திய மதிப்பின்படி தோராயமாக இது ரூ. 15,620 ஆகும். இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வருகிறது.

இந்தியாவில், இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i போன், மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி SoC ஆல் இயக்கப்படும், இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டுமே வரும். 2020 டிசம்பரில் சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகப்படுத்தப் போவதாகவும் இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் 2020 டிசம்பரில் ஸ்னோகர் பிராண்டின் கீழ் சவுண்ட்பாரையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 8i சிறப்பம்சம்

6.55 இன்ச் முழு எச்டி பிளஸ் டூயல் பின் ஹோல் டிஸ்பிளே

மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் பிராசஸர்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

ஆண்ட்ராய்டு 10 இல் எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி ஸ்டோரேஜ்

48 எம்பி பிரைமரி லென்ஸ்

8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்

2 எம்பி டெப் சென்சார்

16 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்

33W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு

4500 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Infinix Zero 8i launching on December know the details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X