Home
Mobile

Infinix Zero 8i இந்தியாவில் பட்ஜெட் விலையில் டூயல் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்.. விலை என்ன?

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்று தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்பே நிறுவனம் டிசம்பர் 2 ஆம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Infinix Zero 8i பட்ஜெட் விலையில் டூயல் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்..

இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த மாதம்இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் சாதனத்தைப் பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜீரோ 8i போனின் விலை பி.கே.ஆர் 34,999 ஆகும், இந்திய மதிப்பின்படி தோராயமாக இது ரூ. 15,620 ஆகும். தற்பொழுது இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 14,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 12 மணிக்கு தனது முதல் விற்பனையைத் துவங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் பிளாக் டயமண்ட் மற்றும் சில்வர் டயமண்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i போன் சிறப்பம்சம்

  • 6.85' இன்ச் முழு எச்டி பிளஸ் டூயல் பின் ஹோல் டிஸ்பிளே
  • மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் பிராசஸர்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 10 இல் எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின்
  • 48 எம்பி பிரைமரி லென்ஸ்
  • 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்
  • 2 எம்பி டெரிட்டரி சென்சார் மற்றும் AI சென்சார்
  • 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • டூயல் 4 ஜி வோல்டிஇ
  • வைஃபை 802.11
  • புளூடூத் 5.0
  • ஜிபிஎஸ்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 33W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு
  • 4500 எம்ஏஎச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 8i Launched In India With Dual Front Camera Setup : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X