Home
Mobile

Infinix ஜீரோ 8i: குவாட் கேமரா..டூயல் செல்ஃபி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்!

Infinix நிறுவனம் இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 8 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இப்போது பாகிஸ்தானில் Infinix Zero 8i ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Infinix ஜீரோ 8i விவரக்குறிப்புகள்

Infinix ஜீரோ 8i விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன், 6.85' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் பிராசஸர்

ஸ்டோரேஜ் மற்றும் பிராசஸர்

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ G90T ஆக்டா கோர் பிராசஸர் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. இதில் எஸ்.டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

Infinix ஜீரோ 8i கேமரா விபரம்

Infinix ஜீரோ 8i கேமரா விபரம்

Infinix ஜீரோ 8i ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் மற்றொரு AI சென்சார் உடன் குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் டூயல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி விபரம்

பேட்டரி விபரம்

Infinix ஜீரோ 8i ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய XOX 7 ஸ்கின் இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

இணைப்பு விபரம்

இணைப்பு விபரம்

பவர் பட்டனில் ஒன்றிணைக்கப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி ஆதரவும் உள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் விலை

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் விலை

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் பாக்கிஸ்தான் சந்தையில் பி.கே.ஆர் 34,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியமதிப்பின் படி இது தோராயமாக ரூ .15,620 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் குவாட் கேமரா, டூயல் செல்பி கேமரா மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் பட்ஜெட் விலையில் அறிமுகமும் சிறந்த ஸ்மார்ட்போனாக இன்பினிக்ஸ் ஜீரோ 8i பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Zero 8i Announced With 48MP Quad Rear Camera and Dual Selfie Camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X