தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Infinix ஜீரோ 5ஜி 2023.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ  5ஜி 2023

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023

அதேபோல் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில்கசிந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்ப்போம்.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

இன்பினிக்ஸ் ஜீரோ  5ஜி 2023 மாடல் எண்

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மாடல் எண்

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனின் மாடல் எண் X6815C என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் MediaTek Dimensity சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 பேட்டரி

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 பேட்டரி

இணையத்தில் கசிந்த தகவலின்படி இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 போனில் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு
4900 எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் ஜீரோ அல்ட்ரா 5ஜி எனும் ஸ்மார்ட்போன் மாடலை கூட அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போனின் விவரங்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றி சற்று விரிவாக இப்போது பார்ப்போம்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி

இந்த மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் துவக்கத்தில் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமாகும். இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 920 5G சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனைநம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி டிஸ்பிளே

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

வாட்ஸ்அப்-ல் ஒரே ஒரு மெசேஜ் போதும்: பான் கார்ட், ஓட்டுனர் உரிமம் அனைத்தும் உங்கள் கையில்: அரசு அறிவிப்பு!வாட்ஸ்அப்-ல் ஒரே ஒரு மெசேஜ் போதும்: பான் கார்ட், ஓட்டுனர் உரிமம் அனைத்தும் உங்கள் கையில்: அரசு அறிவிப்பு!

 4700 எம்ஏஎச் பேட்டரி

4700 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் சிறப்பான அம்சம் என்னவென்றால் அது பாஸ்ட் சார்ஜிங் வசதி தான். அதாவது இந்த போன் 180 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.

  200எம்பி கேமரா

200எம்பி கேமரா

இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 200எம்பி கேமரா உட்பட ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மற்றும் இன்பினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா 5ஜி போன்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Zero 5G 2023 to launch soon with 33W fast charging facility: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X